செய்திகள் :

பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' - தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?

post image

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், பீகாரின் சமஸ்திபூர் மாவட்ட சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியின் கல்லூரி அருகே, சாலையோரத்தில் VVPAT பேப்பர்கள் கண்டெடுக்கப்பட்டது.

Gyanesh Kumar
Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

VVPAT என்பது வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (EVM) இணைக்கப்பட்ட கருவியாகும். வாக்காளரின் வாக்கு, அவர் வாக்களித்த சின்னத்தில் பதிவாகிறதா என்பதை பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

அப்படியான வாக்கு VVPAT சாலையில் கிடந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், ``வாக்குப் பதிவு செயல்முறையில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை.

இந்த சீட்டுகள் உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவுகள். இந்தத் தவறுக்கு காரணமான உதவி தேர்தல் அதிகாரி (ARO) இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், சம்ஸ்திபூர் மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்." என்றார்.

சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியை 2010 முதல் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் விஜய் குமார் சவுத்ரி தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.

அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அர்பிந்த் குமார் சஹானி மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஜன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இரண்டாம் வாக்குப்பதிவு நவம்பர் 11-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும்.

Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' - புகழும் ரயில்வே - வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பார... மேலும் பார்க்க

போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாடி பழனிசாமி காட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்பட... மேலும் பார்க்க

``புகழொடு தோன்றும் பண்பு... அன்பு இளவல்" - சீமானுக்கு எம்.பி கமல்ஹாசன் வாழ்த்து!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

கமல் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்: ``நேற்றைய மாலை விருந்தில்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண... மேலும் பார்க்க

`அரசு நிலம் என்று தெரியாது'- அரசு நில விற்பனை ரத்து, வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் மிஸ்ஸிங்!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவாருக்கு புனேயில் உள்ள முந்த்வா என்ற இடத்தில் உள்ள அரசு நிலம் 40 ஏக்கர் வெறும் ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க

சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "முதல்வர் செய்வது டிராமா" - கு.பாரதி பேட்டி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி 13 நாட்களாகப் போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 100 வது நாளை எட்டியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்... மேலும் பார்க்க