செய்திகள் :

புதுசு, பழசு - இந்த நிதியாண்டிற்கு எந்த வருமான வரி முறை நல்ல சாய்ஸ்? | பணம் வளர்ப்போம்

post image

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.

அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'வருமான வரிக் கணக்குத் தாக்கல்'.

இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் ஐ.டி சீசன் வருகிறது. இந்த ஆண்டு முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது.

வழக்கமாக, நாம் ஃபில் செய்யும் ஃபார்ம் 16 பெயர் மாறியிருக்கிறது. இந்த மாதிரி ஏகப்பட்ட மாற்றங்களை இந்த ஆண்டு வருமான வரிக் கணக்குத் தாக்கலில் சந்திக்கப் போகிறோம். நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கப்போகிறது.

ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு
அதனால், முன்னோட்டமாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்து நமக்கு வழிகாட்டுகிறார் கிரி பாபு.

"வருமான வரிக் கணக்குத் தாக்கலில் மிக முக்கியமான கான்செப்ட் - பழைய , புதிய வருமான வரி முறை. இதில் எது நல்லது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், அவை என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

பழைய வருமான வரி முறையைப் பொறுத்தவரை, அரசாங்கம் மக்கள் நிறைய முதலீடுகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தது. அதனால், முதலீடு செய்தால், உங்களுக்கு வரி விலக்கு என்று சலுகைகளையும் அள்ளிக் கொடுத்தது.

ஆனால், நம் மக்களில் பலர் இந்த விலக்கைத் தவறாக பயன்படுத்த தொடங்கினார்கள். உதாரணத்திற்கு, இன்சூரன்ஸ் செய்திருக்கமாட்டார்கள். ஆனால், இன்சூரன்ஸ் செய்ததுபோல, கணக்குக் காட்டி வரி விலக்கு பெறுவார்கள்.

அது எப்படி என்று கேட்டீர்கள் என்றால், இப்போது வரை, வரி விலக்கை கிளைம் செய்ய, விலக்கிற்கு அப்ளை செய்யும் காரணங்களுக்கான ஆவணங்களைக் காட்ட தேவையில்லை.

வருமான வரி
வருமான வரி

இதை பயன்படுத்தி தான் பலரும் வருமான வரித் தாக்கல் செய்வதில் தில்லு முல்லு செய்து வந்தனர்.

இதனால், இதற்கு செக் வைக்க அரசாங்கம் கொண்டு வந்தது தான் - புதிய வருமான வரி முறை.

பழைய வருமான வரி முறையில், 'முதலில் முதலீடு, அடுத்தது தான் செலவுகள்' என்றால், புதிய வருமான வரி முறையில், 'முதலில் வரிக் கட்டுதல், பிறகு தான் சேமிப்பு, செலவு எல்லாம்'.

இதனால், புதிய வருமான வரி முறையில் இருப்பவர்கள், வரிக்கு பிறகு, அவர்களாகவே முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய வருமான வரி முறையில் மிகப்பெரிய ப்ளஸ், வரி விலக்கு ஸ்லாப்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2020-21 ஆண்டுக்குப் பிறகு, பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய வருமான வரி முறையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

வருமான வரி
வருமான வரி

அடுத்ததாக, 2023-ம் ஆண்டிற்குப் பிறகு, பழைய வருமான வரி முறைக்கு தனியாக விண்ணப்பம் எழுதி தர வேண்டியதாக இருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது, இன்னும் சில ஆண்டுகளில், பழைய வருமான வரி முறையே முழுமையாக ரத்து செய்யப்படலாம்.

அதனால், வரி முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, இந்த அனைத்தையும் கவனத்தில் கொண்டு, முடிவு செய்யுங்கள்".

எவ்வளவு தொகை கையில் இருந்தால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடையலாம்? | Download Free SWP Calculator

நாம் அனைவரும் வாழ்வில் ஒரு கட்டத்தில் நிதிச் சுதந்திரத்தை (Financial Freedom) அடைய விரும்புகிறோம். ஆனால், நிஜமான நிதிச் சுதந்திரம் என்றால் என்ன? விலையுயர்ந்த கார், பெரிய வீடு, ஆடம்பரமான வாழ்க்கை... இவ... மேலும் பார்க்க

Labham: இறக்குமதி வரியால் விலை உயர்ந்த தங்கம்... இனி எப்படி வாங்கினால் அதிக லாபம்?

தங்கத்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதனால் தங்கம் விலை 13-ஆம் தேதி அன்று மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.1070 அதிகரித்திர... மேலும் பார்க்க

NRI Corner: வங்கி எஃப்.டி Vs மியூச்சுவல் ஃபண்ட்... வரிக்குப் பின் எதில் அதிக லாபம் கிடைக்கும்?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் தங்கள் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வங்கி பிக்சட் டெபாசிட் ஒன்றையே பிரதானமான விஷயமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் வங்கி எஃப்.டி.யில் ... மேலும் பார்க்க

'மின் கட்டணம்: 90% மிச்சப்படுத்தும் சூப்பர் வழி'- மதுரையில் நாணயம் விகடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.இதில் சூரிய சக... மேலும் பார்க்க

NRI Corner: என்.ஆர்.இ வங்கி எஃப்.டி.யில் ரூ.13.9 லட்சம் கோடி! வெளிநாட்டுத் தமிழர்கள் செய்வது சரியா?

உலகம் முழுக்க உள்ள இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து எதில் முதலீடு செய்கிறார்கள் தெரியுமா?வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில்தான். உ... மேலும் பார்க்க

40 வயதைக் கடந்துவிட்டீர்களா? 'ஸ்ட்ரெஸ்' இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு - Multi Asset Fund!

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஓயாத ஓட்டம். லேப்டாப், டார்கெட், மீட்டிங், இஎம்ஐ, அதோடு குழந்தைகளின் கல்லூரிச் செலவுகள் என ஒரு பரபரப்பான வாழ்க்கை. 40 வயதைத் தொடும்போதுதான் பொறுப்புகளின் முழுப் பளுவும்... மேலும் பார்க்க