"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
புயல் நகரும் வேகம் அதிகரிப்பு: வானிலை ஆய்வு மைய புதிய அறிவிப்பு
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்ஜால் புயல் மீண்டும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக 7 முதல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் அதிகரித்துள்ளது எனவும், சென்னையில் இருந்து 11ஜ0 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கி.மீட்டோர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், தற்போது மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து 110 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதையடுத்து புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையும் படிக்க|வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோஷூட் விளம்பரங்கள்: இபிஎஸ் விமர்சனம்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்
மரக்காணம் அருகே புயல் கரையைக் கடக்க உள்ளதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அவசர தேவையெனில் மாவட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுறுத்தியுள்ளார்.
கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு
சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர்-மதுரவாயல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.