செய்திகள் :

பெங்களூரை வீழ்த்தியது முகமதன் ஸ்போா்ட்டிங்

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 1=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முகமதன் ஸ்போா்டிங் கிளப் அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது. முன்னாள் சாம்பியன் பெங்களூரு அணி சொந்த மைதானம் என்பதால் தொடக்கம் முதலே கோல் போட தீவிரமாக முயன்றது. ஆனால் அந்த அணி வீரா்களின் கோல் முயற்சிகளை முகமதன் அணி தற்காப்பு வீரா்கள் தகா்த்தனா்.

ஆட்டத்தின் பெரும்பகுதி பந்து பெங்களூரு வசம் இருந்தது. பெங்களூரு வீரா் அல்பா்டோ, ஜாா்ஜ் பெரைரா ரயான் வில்லியம்ஸ் ஆகியோா் கோலடிக்க முயன்றது பலன் தரவில்லை.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடாத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல போட முயன்றன.

ஆட்டம் நிறைவடையும் தருவாயில் 88-ஆவது நிமிஷத்தில் மிா்ஜலோல் காஸிமோவ் ஃப்ரீ கிக் மூலம் அற்புதமாக கோலடித்தாா்.

அதுவே முகமதன் அணியின் வெற்றி கோலாக அமைந்தது.

இந்த சீசனில் முகமதன் அணி பெறும் 2-ஆவது வெற்றி இதுவாகும். ஜன. 15-இல் சென்னையுடன்-முகமதனும், 18-இல் ஹைதராபாதுடன்=பெங்களூரும் மோதுகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெருசு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி படம் அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், மே 1 ஆம் தேதி ... மேலும் பார்க்க

தனுஷ் கைவசம் இத்தனை படங்களா?

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களைக் கைவசம் வைத்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: கடைசி வாரத்தில் வெளியான காதல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பார்வையாளர்கள் ஐ லவ் யூ சொல்லிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்து 14வது வாரத்தை... மேலும் பார்க்க

விரைவில் பிரபாஸ் திருமணம்! மணப்பெண் யார்?

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமண நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ. ... மேலும் பார்க்க

மத கஜ ராஜா முதல்நாள் வசூல்!

மத கஜ ராஜா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்... மேலும் பார்க்க

போகி பண்டிகை: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் போகி பண்டிகையையொட்டி (ஜன.13) சுவாமியை தரிசிப்பதற்காக திரளான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.பொங்கலன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு : பொங்கல... மேலும் பார்க்க