``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... உங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யுங்கள்! #HerSafety
கோயம்புத்தூரில் அண்மையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது, நம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சமூக அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண, அரசின் நடவடிக்கை மட்டும் போதாது; ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை மாற்றமும் அவசியம். இந்தச் சூழலில், விகடன் அதன் வாசகர்களின் குரலை ஆவணப்படுத்தவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வுகளை நோக்கி நகர்த்தவும் முடிவு செய்துள்ளது.

உங்களின் பார்வை என்ன?
வாசகர்களாகிய நீங்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உங்கள் ஆழமான பார்வையைப் பதிவு செய்யலாம். உங்கள் கட்டுரைகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பிரிவில் அமையலாம்:
சமூகப் பார்வை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? சட்டம் மற்றும் சமூக நீதி அமைப்புகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
தீர்வு: இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி, குடும்பம் மற்றும் அரசு மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் என்னென்ன?
தனிப்பட்ட அனுபவம் (பெயர் வெளியிடாமல்): உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு குறித்த அனுபவங்கள் (பெயர், இடம் போன்ற விவரங்கள் பாதுகாக்கப்படும்).
எதிர்ப்புக் குரல்: ஆண்களின் மனநிலையில் வர வேண்டிய மாற்றங்கள், பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்துக்கள்.
நினைவில் கொள்க:
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan.
இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.












