செய்திகள் :

`பெத்தி' படப்பிடிப்பின் போது நடந்த விபத்து; கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

post image

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், 'பெத்தி' திரைப்பட படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்தார். பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்மருத்துவமனை தலைவரும், எலும்பியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.ராஜசேகரன் தலைமையில் ராம் சரணுக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலான மணிக்கட்டு காயம் என்பதால், அமெரிக்காவின் மியாமியைச் சேர்ந்த கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அலெஜான்ட்ரோ பாடியா சிறப்பு அழைப்பாளராக மருத்துவக் குழுவில் இணைந்திருந்தார். மேலும், டாக்டர் பிரவீன் பரத்வாஜ் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவும் அறுவை சிகிச்சையில் பங்கேற்றது.

ராம் சரண்
ராம் சரண்

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், ராம் சரண் தற்போது நலமாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் வழக்கமான பயிற்சியைத் தொடங்கி, அதன் பின் மீண்டும் திரைப்படப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின்போது, நடிகர் சிரஞ்சீவி, சுரேகா கொனிடேலா மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்தனர். விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் ராம் சரண் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

Sony Vizha: தமிழ் பொழுதுபோக்கு சேனல்களுக்கு புது போட்டி - ரஹ்மான், சமந்தாவுடன் களமிறங்கும் சோனி விழா

தமிழ் தொலைக்காட்சி உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முன்னணி ஒளிபரப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), தமிழில் 'சோனி விழா' (Sony VIZHA) என்ற புதிய பொழுதுபோக்கு சே... மேலும் பார்க்க

"மோசமான படம்" என்ற பட்டமே வைரல் விளம்பரமானது - ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடி வசூல்!

‘இந்தப் படம் நல்லா இருக்காம்... டிக்கெட் போடு!’ என்று சொல்வதைத்தான் இதுவரை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சீனாவில் ஒரு படத்துக்கு நிலைமை அப்படியே தலைகீழ் ‘படம் படுமோசமாம்’... அப்படி என்னதான் மோசமாக இரு... மேலும் பார்க்க

'இதயம்' முரளி படத்திற்கு முன்னோடி! – வாய்விட்டுச் சொல்லாத காதலின் வலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

BTS ரசிகர்களுக்கு ஒரு Shock… `கேட்கும் திறன் குறைபாடு' - பாடகர் V பகிர்ந்த தகவல்!

BTS ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்! உலகப் புகழ்பெற்ற K-pop குழுவான BTS-ன் பாடகர் V, தனக்கு ஒரு காதில் கேட்கும் திறன் குறைபாடு இருப்பதாக முதன்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.V எனும் மேடைப் பெயரால்... மேலும் பார்க்க

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவத... மேலும் பார்க்க