செய்திகள் :

பெருநிறுவனங்கள் பாஜகவிற்கு வழங்கிய ரூ.3,112 கோடி; யார் கொடுத்தார்கள்? காங்கிரஸிற்கு எவ்வளவு?

post image

தேர்தல் பத்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று கடந்த ஆண்டு அந்தப் பத்திரங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

இதனால், பெரு நிறுவனங்கள் தற்போது அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral Trust) மூலம் பணம் வழங்கி வருகின்றன.

தேர்தல் அறக்கட்டளை என்பது நிறுவனங்கள் இணைந்து அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க தொடங்கும் அறக்கட்டளை ஆகும். 'அறக்கட்டளை' என்று பெயரிலேயே இருக்கிறது... அதன் படி, இந்த அறக்கட்டளைகள் மூலம் கொடுத்த நிதிக்கு அரசியல் கட்சிகள் சட்டப்படி எந்தக் கைமாறும் செய்யமுடியாது.

2024-25 நிதியாண்டில், 9 தேர்தல் அறக்கட்டளைகள் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,811 கோடி நிதி வழங்கியிருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட, 200 சதவிகிதம் உயர்வாகும். கடந்த நிதியாண்டில், அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள் ரூ.1,218 கோடி தான் வழங்கி இருக்கின்றன.

பாஜக
பாஜக

யாருக்கு... எவ்வளவு?

இதில் பாஜகவிற்கு மட்டுமே ரூ.3,112 கோடி கிடைத்திருக்கிறது. இது மொத்த தொகையில் 82 சதவிகிதம் ஆகும்.

காங்கிரஸ் ரூ.299 கோடி பெற்றிருக்கிறது. இது 8 சதவிகிதம். பிற கட்சிகள் ரூ.400 கோடி நிதி பெற்றிருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 10 சதவிகிதம்.

எந்த அறக்கட்டளைகள்?

நிதி வழங்கிய அறக்கட்டளையில் முதல் இடத்தை பிடித்துள்ள அறக்கட்டளை - புரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட். இந்த அறக்கட்டளை இருந்து மட்டும் பாஜகவிற்கு ரூ.2,180 கோடி சென்றிருக்கிறது. இந்த அறக்கட்டளைக்கு ஜிண்டால் ஸ்டீல், மேகா பொறியியல், பாரதி ஏர்டெல், அரபிந்தோ பார்மா போன்ற பெரு நிறுவனங்கள் நிதி அளித்திருக்கின்றன.

அடுத்ததாக முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை ரூ.915 கோடி நிதி அளித்திருக்கிறது. இதில் 81 சதவிகித நிதி பாஜகவிற்கு சென்றிருக்கிறது. இந்த அறக்கட்டளையில் பெரும்பாலும் டாடா குழும நிறுவனங்களே உள்ளன.

பணம்
பணம்

ஹார்மோனி, நியூ டெமாக்ரடிக், Triumph அறக்கட்டளை முறையே ரூ.30 கோடி, ரூ.150 கோடி, ரூ.21 கோடி பாஜகவிற்கு வழங்கியுள்ளது.

ஜான்கல்யான் அறக்கட்டளை பாஜக, காங்கிரஸ் என சமமாக நிதி வழங்கியுள்ளது.

மீதமுள்ள அறக்கட்டளைகள் பாஜகவிற்கு மட்டும் நிதி வழங்கியுள்ளது.

என்ட் கார்டு இல்லை...

முன்பு, தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுக்கப்பட்ட நிதி எந்தக் கட்சிக்கு எவ்வளவு சென்றது... யார் தந்தார்கள் என்பது தெரியாது. ஆனால், இனி தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொடுக்கப்படும் நிதி காசோலை, வங்கி பரிவர்த்தனை, யு.பி.ஐ மூலம் கொடுக்கப்படும். அது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும்.

எது எப்படியோ, தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், அரசியல் கட்சிகளுக்கு செல்லக்கூடிய நிதிக்கு மட்டும் என்ட் கார்டு இல்லை போலும்.

"தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசுக்கு? ஏன் தவிர்த்தீர்கள்?" - சீமான் காட்டம்

தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - பெருமூச்சுவிட்ட வாகன ஓட்டிகள்!

சேலம் மாவட்டம் சேலம் - பெங்களூர்‌ தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் பிரிவு மற்றும் ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தின் கீழ் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக விபத்து ஏற்... மேலும் பார்க்க

SIR: `இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று திமுக-காரர்களாகி விடுகிறார்கள்!' - இபிஎஸ்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தவெக விருப்பப்பட்டால் பாஜக கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

`சித்ரவதை, தற்கொலை முயற்சி, அச்சத்தில் வாழ்க்கை' மோடியிடம் நியாயம் கேட்கும் மும்பை ஹாஜி மஸ்தான் மகள்

மும்பையில் மாபியாவிற்கு முதன் முதலில் வித்திட்டது ஹாஜி மஸ்தான் ஆவார். மும்பை தென்பகுதியில் கடத்தலில் பிரதானமாக ஈடுபட்டிருந்த ஹாஜி மஸ்தான் மற்றொரு தாதாவான வரதராஜ முதலியார் என்பவருடன் இணைந்து செயல்பட்டா... மேலும் பார்க்க

விஜய்: `மீட்பர்; ஒரு அரசன் வருவான்!' - ஸ்கோர் செய்த திமுக; சுதாரித்த தவெக - கிறிஸ்துமஸ் விழா பின்னணி

விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' எ... மேலும் பார்க்க