செய்திகள் :

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில் அந்த மாணவி பயணம் செய்தபோது, மாணவியின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பேரணாம்பட்டு டவுன் மவுலானா வீதியைச் சேர்ந்த தோல் வியாபாரி அப்துல் லத்தீப் (52) என்பவன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றிருக்கிறான். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி பேருந்தில் பயணம் செய்த சக பயணிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்துல் லத்தீப்

அப்போது, அப்துல் லத்தீப் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றிருக்கிறான். இதைக் கவனித்த பயணிகள் அவனைப் பிடித்து தாக்கி, பேரணாம்பட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, `வழக்கு ஏதும் வேண்டாம்’ எனக்கூறி அப்துல் லத்தீப்பை விடுவிக்கச் சொல்லி அரசியல் பின்னணியுடைய உள்ளூர் நபர்கள் இருவர், போலீஸாரிடம் சமரசம் பேசியிருக்கின்றனர். இது குறித்து, பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய பின்னரே வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் லத்தீப்பை கைது செய்திருக்கின்றனர்.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க