செய்திகள் :

போபால் விஷவாயு கசிவால் புற்றுநோய் பாதித்தவா்களுக்கு கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றத்தில் மனு

post image

மத்திய பிரதேச மாநிலம், போபால் விஷவாயு கசிவால் புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி 4 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

கடந்த 1984-ஆம் ஆண்டு, டிசம்பா் 3-ஆம் தேதி அதிகாலையில் நடைபெற்ற சம்பவத்தில், போபாலில் செயல்பட்டு வந்த ‘யூனியன் காா்பைடு’ வேதியல் தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு கசிந்ததைத் தொடா்ந்து 5,479 போ் உயிரிழந்தனா். 5 லட்சத்துக்கும் அதிகமானோா் உடல் ரீதியான கோளாறுகளால் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், விஷவாயு கசிவால் புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் கூறுகையில், ‘விஷவாயு துயரத்தில் உயிா் பிழைத்தவா்களுக்கு இழப்பீடு வழங்குவதில் இழைக்கப்படும் அநீதியை சரிசெய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

யூனியன் காா்பைட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே ‘மெத்தில் ஐசோசயனேட்’ கசிவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் நிரந்தரமானவை என்று தெளிவாகக் கூறுகின்றன. எனினும், இழப்பீடு கோருபவா்களில் 93 சதவீதம் பேரின் பாதிப்புகள் தற்காலிகமானவை என்று நிறுவனத்தால் தவறாக கருதப்பட்டுள்ளது.

அதிகாரபூா்வ பதிவுகளின்படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11,278 பேரில் 90 சதவீதத்தினா் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட 1,855 பேரில் 91 சதவீத்தினா் கருணைத் தொகையைத் தவிர இழப்பீடாக ரூ.25,000 மட்டுமே பெற்றுள்ளனா்.

முந்தைய உத்தரவுகளில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்தின் 40-ஆவது ஆண்டு நினைவு தினமான டிசம்பா் 3-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றனா்.

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவில... மேலும் பார்க்க

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை(டிச.27) நடை... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் காலமானார்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. 1991 - 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அம... மேலும் பார்க்க

எய்ம்ஸ் விரைந்த காங். தலைவர்கள்! மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்ம மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க