செய்திகள் :

மகளின் அறிமுக படத்தை ஹிட்டாக்க ஷாருக் கான் திட்டம்; கிங் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கும் ரன்வீர்

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது மகள் சுஹானா கானை `கிங்' என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் ஷாருக் கான் கெளரவ வேடத்தில் மட்டும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது படத்தின் முழு கதையையும் ஷாருக் கான் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். படத்தில் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, சுஹானா கான், அர்ஷத் வார்சி, அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது ​​சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மேலும் ஒரு நடிகர் கெளரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது மகள் நடிக்கும் படம் பெரிய அளவில் ஹிட்டாக வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்ட இயக்குநரை நீக்கிவிட்டு, இயக்குநர் ஆனந்தை ஷாருக் கான் நியமித்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூலைக் கொடுத்த துரந்தர் 2 படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு மர்மமான கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சுஹானா கான்

ரன்வீர் சிங் ஒரு ரகசிய கடிதத்தை சுஹானாவிடம் ஒப்படைக்கிறார், அது வில்லன்களிடமிருந்து தப்பித்து அடுத்த பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல சுஹானாவிற்கு உதவுகிறது.

இப்படத்தில் ரன்வீர் சிங்கின் கெளரவ தோற்றம் குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், சில வாரங்களுக்கு முன்பு, கிங் படப்பிடிப்பில் ஒருவர் ஒரு குழந்தையுடன் நிற்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலானது. நெட்டிசன்கள் அதில் இடம் பெற்று இருப்பது ரன்வீர் சிங் மற்றும் அவரது மகள் துவாவின் படம் என்று கூறினர். எனவே ரன்வீர் சிங் கிங் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கெனவே கிங் படத்தில் ரன்வீர் சிங் மனைவி நடிகை தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இதனால் அவரது கணவர் ரன்வீர் சிங் வீட்டில் இருந்து தனது மகளை கவனித்து வருகிறார்.

சமீபத்தில் தீபிகா படுகோன் தான் இரண்டாவது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். வயிற்றில் குழந்தையோடு சமீபத்தில் விளம்பரம் ஒன்றிலும் தீபிகா நடித்தார். கிங் படம் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

உபி: 15 வயதில் திருமணம்; 22 வயதில் 5 குழந்தைகள்: ஆண் குழந்தைக்காக 6-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்

வட மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் ஆந்திரா அரசு அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்க... மேலும் பார்க்க

CarryMen: ஷாப்பிங் செல்ல வாடகைக்கு ஆள் - பெண்களின் சுமையை குறைக்க டெல்லி ஸ்டார்ட்ஆப்பின் புதுதிட்டம்

ஷாப்பிங் அல்லது ஜவுளிக்கடைகளுக்கு செல்வதாக இருந்தால் பெண்கள் தங்களது துணைக்கு ஒரு ஆடவரை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் ஷாப்பிங் செல்லும் பெண்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை சுமக்க ஆள் து... மேலும் பார்க்க

பாராகிளைடர் மீது மோதிய விமானம் - அவசர பாராசூட் மூலம் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் வீடியோ

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வானில் பறந்து கொண்டிருந்த பாராகிளைடர் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில், பாராகிளைடரின் இறக்கை கிழிந்து சுழன்று கீழே விழுந்தப... மேலும் பார்க்க

ஒரு மாம்பழம் ரூ. 3000; 9 மரங்களுக்கு 9 பாதுகாவலர்கள்; உலகின் மிகப்பெரிய மாம்பழத்தின் சிறப்பு என்ன?

தற்போது நாடு முழுவதும் மாம்பழ சீசன் ஆகும். எங்கும் மாம்பழங்களாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜுனா கட்டிவாடா என்ற கிராமத்தில் அபூர்வ வகை மாமரங்கள் வளர்கின்றன.... மேலும் பார்க்க

செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வந்த தாக்குதலுக்கு கடந்த மாதம் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் நிரந்தர போர்ந... மேலும் பார்க்க