Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார...
மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்
மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாழ்க்கையில் விரக்தி, பிரச்னைகள், மன உளைச்சல், தனிமை, தீய சக்திகளின் பாதிப்புகள் மற்றும் பெரும் தடைகளை எதிர்கொள்பவர்கள் கட்டாயம் மகாருத்ர ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள்.
மகாருத்ர ஹோமம் என்பது ருத்ர மந்திரத்தை இடையறாது உச்சரித்து ஈசனின் அருளால் வாழ்க்கையின் எல்லா துன்பங்களையும் அகற்றி, நல்வாழ்வைப் பெறும் ஒரு மகத்தான வழிபாட்டு முறையாகும். இது ஆதியில் சப்த ரிஷிகளால் செய்யப்பட்டு பிறகு வேத காலத்தில் சிறப்படைந்த தொன்மையான மற்றும் முதன்மையான வேள்வி எனப்படுகிறது. ஹோமங்களில் சிறப்பான இந்த ஸ்ரீருத்ர ஹோமம் செய்தவர் வாழ்வில் எந்த கவலையும் அச்சமும் இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை.
அதிலும் இந்த ருத்ர ஹோமத்தை மார்கழி திருவாதிரை நன்னாளில் செய்வது இரட்டிப்பு மடங்கு பலன்களைத் தரும் என்பதும் ஐதீகம். எனவே வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாகவும் மாற்ற சிறப்பான இந்த மகாருத்ர பரிகார ஹோமத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம்.
சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்தில் நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் கலந்து கொண்டு பெரும் பயனை அடைந்தது. அவ்வாறே மீண்டும் அங்கு நடத்த வாசகர்களின் விருப்பத்தோடு நடத்தவுள்ளோம்.
மகாருத்ர ஹோமம் என்பது யஜுர் வேதத்தின் சாரமான மையப்பகுதியான ஸ்ரீருத்ர மந்திரங்களை 1331 முறை திரும்பத் திரும்பச் சொல்லி அந்த மகேசனை மகிழ்வித்து செய்யப்படுவது. ஆயுளில் ஒருமுறையாவது இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கிறது சாஸ்திரம். செய்வதற்கு கடினமானதும் பெரும் பொருட்செலவை உண்டாக்குவதுமான இந்த ஹோமத்தை உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடனும் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயமும் இணைந்து 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடத்தவுள்ளது.

கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கு அனைத்து மக்களும் எந்த பேதமின்றி தாமே ஈசனை பூஜிக்கலாம் என்பது சிறப்பு அம்சம். இங்கு எந்த வழிபாட்டுக்கும் கட்டணமில்லை என்பதும் சிறப்பானது. இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் 63 நாயன்மார்கள், மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய நடராஜப் பெருமான், சோமாஸ்கந்தர் என பல்வேறு மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இவர் நடராஜப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் வீதி உலா வரச் செய்ய வேண்டும் என்பது இவரது ஆயுள் கால கனவு. இதனால் இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அன்று அதிகாலை வைரத்தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் 2025 டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் மகாருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்கு கொண்டால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், கீர்த்தி, அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி.

ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் கவலைகள் நீங்கும். நோய்நொடிகள் அகலும். கடன் தரித்திரம் விலகும். தோஷங்களும் பாவங்களும் நீங்கும். இந்த மகாருத்ர ஹோமத்தில் உங்கள் வேண்டுதலை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது உறுதி. எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெறுங்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.
















