செய்திகள் :

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

post image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற மாணவி, பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரை அழைத்து மாற்றுச் சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் சேர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

அப்போது, மாணவியின் தாய் கைகளை கட்டியபடி தலைமையாசிரியையிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது மாணவி, தன் தாயிடம் கைகட்டி நிற்க கூடாது என சொல்லியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியை, `ஏன் உங்க அம்மா கை கட்டி பதில் சொன்னால் உனக்கு என்ன?' என மாணவியை முறைத்துப் பார்த்து,  கோபமாக  

``இப்போது என்னிடம் இவ்வளவு திமிராக நடந்து கொள்கிறாய். மற்ற பள்ளிகளிலும் இப்படித்தான் நடந்திருப்பாய். அதனால்தான் உன்னை அந்த பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளார்கள்" என கூறியதுடன், `வெளியே போடி" என்று ஒருமையில் அதட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளியிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் நடந்தே நல்லமாள்பட்டி வரை சென்றுள்ளார். மகளை தேடி இருசக்கர வாகனத்தில் சென்ற தாயார், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து, ஆட்டோவில் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

அன்று இரவு மாணவி உணவு சாப்பிடாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மறுநாள் ஏற்கனவே படித்த அரசு கள்ளர் பள்ளிக்குச் சென்ற மாணவி மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வந்துள்ளார். அன்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனது மகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைமையாசிரியை சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தாயாரை பிறர் முன்பு கை கட்டி நிற்க வைத்த சம்பவத்தை பார்த்து மாணவி மனவேதனை அடைந்ததாகவும், அதன்பின்னர் தலைமையாசிரியை பேசிய விதத்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மாணவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி

என் அம்மா ஏன் மற்றவர்கள் முன்பு கை கட்டி நிற்க வேண்டும்? என்ற வேதனையில் தனது மகள் இருந்ததாகவும், சாதிய பாகுபாட்டை தாங்க முடியாமலும், தலைமையாசிரியரின் பேச்சால் ஏற்பட்ட அவமானத்தாலும் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில், அரசு பள்ளி தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார். நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய... மேலும் பார்க்க

`கஞ்சா நெட்வொர்க்' - ஒடிசாவுக்கே சென்று முக்கிய குற்றவாளியைத் தட்டித்தூக்கிய வேலூர் போலீஸ்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா (ஃபைல் படம்)கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மா... மேலும் பார்க்க