செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது?

post image

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழுதினார்.

அவர் கணிதப் பாடத் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது திடீரென கழிவறை செல்ல வேண்டும் என்று பணியில் இருந்த ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். அவரும் மாணவிக்கு அனுமதி கொடுத்தார். மாணவி கழிவறைக்குச் சென்று 15 நிமிடங்கள் ஆன பிறகும் திரும்பி வரவில்லை. இதனால் ஆசிரியருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உடனே பெண் உதவியாளர் ஒருவரை அனுப்பி மாணவியைப் பார்த்து வரும்படி ஆசிரியர் கேட்டுக்கொண்டார். பெண் உதவியாளர் அங்கு சென்று பார்த்தபோது கழிவறை கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

உடனே பெண் உதவியாளர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மாணவி மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவறை சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்று குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் குழந்தை மற்றும் மாணவியைச் சோதித்த போது இருவரும் நன்றாக இருப்பது தெரிய வந்தது. மாணவி கர்ப்பமாக இருந்தது அவரது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாமல் இருந்தது.

விசாரணையில் அம்மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக பர்மன் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதில் அவர்களுக்குள் உறவு ஏற்பட்டு மாணவிக்கு குழந்தை உருவாகி இருக்கிறது. இது குறித்து மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பர்மனைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து தேர்வு மையத் தலைவர் நரேந்திர குமார் போத்தே கூறுகையில், திடீரென கழிவறைக்குச் சென்ற மாணவி திரும்பி வராததால், ஊழியரை அனுப்பி சோதித்தோம். உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தேர்வு நடக்கும்போது இந்தச் சம்பவம் நடந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தோம்'' என்றார். போலீசார் சிறுமியின் குடும்பத்தாரிடம் பேசி கூடுதல் தகவல்களைப் பெற்றுள்ளனர்.

பஸ்சில் வந்தவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ரூ.15 லட்சம் கொள்ளை! - 3 பேர் கைது 1 கார் பறிமுதல்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். சென்னையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அக்ரம். இவர் தனது தந்தையான அப்துல் ரகுமானிடம், தஞ்சாவூர் மாவட்ட... மேலும் பார்க்க

வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை

வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூவரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்... மேலும் பார்க்க

ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்த... மேலும் பார்க்க

Epstein Files: "என் மிகப்பெரிய தவறு; அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்" - என்ன சொல்கிறார் பில் கேட்ஸ்?

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் - மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி!

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வ... மேலும் பார்க்க