காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது
மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்" - அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர்!
இந்தியாவிலேயே சிறந்தப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருதளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன், அணுகுமுறை, உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 'நகர்ப்புற போக்குவரத்துத் திறன் விருது' வழங்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஹரியானாவின் குருகிராமில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் 'நகர்ப்புற போக்குவரத்து திறன்' விருதை வழங்கினார்.
இதேபோல், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல் திறனுக்கான விருதையும், நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழையும் பெற்றிருக்கிறது.
இதில் நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற பிரிவில் உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றிருக்கிறது. இதற்கான அப்போது மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கரும் உடனிருந்தார். இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``A city’s living standards are reflected in the reliability and quality of its public transport.

இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், பாராட்டுகள்!
நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!" எனப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

















