செய்திகள் :

மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில்..?

post image

''மனநலம் குறித்த விழிப்புணர்வு ஒருபக்கம் பாசிட்டிவாக வளர்ந்துகொண்டிருக்க, மறுபக்கம் இல்லாத பிரச்னைகளை இருப்பதாகச் சொல்வது... சிறிய பிரச்னைகளைப் பெரிய மனநல பிரச்னையாக நினைத்துக்கொள்வது என இந்த இளம் தலைமுறையினரிடம் மனநல பிரச்னைகளை ஹேண்டில் செய்வதில் சிக்கல் இருக்கிறது'' என்கிற உளவியலாளர் சுஜித் ஜீவி, இதுதொடர்பாகப் பேசினார்.

OCD
OCD

''ஜெராக்ஸ் எடுக்க செல்கிறேன், ஸ்கூட்டி ஓட்ட பழகுகிறேன், ஜீபே அனுப்புகிறேன் என்று சில பிராண்ட்களின் பெயரை அந்த செயல்பாட்டிற்கான பெயராய் பேச்சு வழக்கில் மக்கள் நாம் உபயோகப்படுத்தி வருகிறோம். அதுபோலவே மனநலம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளையும் பொத்தாம்பொதுவாக, இவருக்கு Depression, இவருக்கு ஓசிடி (OCD), இவர் அடிக்ட் (addict) என்றெல்லாம் பேசுவது இப்போதைய சமூக வலைத்தள உலகில் சாதாரணமாக மாறி வருகிறது.

சில பிரபலங்களும் நேர்காணல்களில் நான் மிகவும் சுத்தம் பார்க்கக்கூடிய நபர் என்பதைச் சொல்வதற்குப் பதில் எனக்கு OCD என்று சொல்கிறார்கள். OCD என்பது அதீத சுத்தம் பார்ப்பது கிடையாது. அது ஒரு மனநல பிரச்னையின் வெளிப்பாடு. ஒருவருக்கு மனநல பிரச்னை உள்ளதா என்பதை மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களால்தான் கணிக்க இயலும்.

இளைஞர்களும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் உளவியல் பிரச்னைகளை பெருமையாக வைத்துக்கொள்ளும் ஆபத்தான ட்ரெண்டும் சகஜமாகி வருகிறது. உதாரணத்துக்கு, சைக்கோ கில்லர், சாடிஸ்ட், இன்ட்ரோவர்ட், ஆங்க் ஷியஸ் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள். தாம் யாரென்பதை முழுமையாகத் தாமே உணர்வதற்கு முன்பே சமூக அழுத்தம் காரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ள இதுபோன்ற ஏதோ பெயர்களுக்குள்ளும், குழுக்களுக்குள்ளும் தம்மைப் பொருத்திக் கொள்கிறார்கள்.

சண்டைக்காட்சி பார்த்துச் சிரிப்பவர்கள் சாடிஸ்ட் என்றும், சிறிய அளவு மறதி வந்தாலும் அவர்களுக்கு அம்னீஷியா என்றும், ஒரு முறை மேடையில் பயந்தவர்களைப் பார்த்து இவனுக்கு பானிக் அட்டாக் என்றும் முத்திரை குத்துகிறார்கள். இதுவும் ஒரு ஆபத்தான போக்கே. தன்னுடைய மனநலப் பிரச்னைகள் பற்றி நண்பர்கள் கூறும் விஷயங்களைக் கேட்டுப் பயந்து கூகுளில் தேடிப் பார்த்து தனக்குப் பெரிய பிரச்னை இருப்பதாகத் தாமாகவே நினைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

தேசிய மனநல ஆரோக்கியக் கணக்கெடுப்பில் (NMHS) வெளிவந்த உண்மை என்னவென்றால், மனநலப் பிரச்னைகளான மனச்சோர்வு, பைபோலார் கோளாறு, மனப் பதற்றம், போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70-ல் இருந்து 92 சதவிகிதம் வரை அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதே இல்லை என்பதுதான். இதை ஆங்கிலத்தில் 'Treatment Gap' என்று சொல்வார்கள். இதற்கு மனநலப் பிரச்னைகள் பற்றி மக்களிடம் இருக்கும் தவறான புரிதலும், மனத்தடையும் மற்றும் சமூகத்தில் மனநலப் பிரச்னை உள்ளவர்களை எவ்வாறு நடத்துவார்கள் என்கிற பயமும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

உடல்நலப் பிரச்னை வந்தால் அதில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதை இப்போது சரியாகச் செய்து வரும் சமூகம், மனநலப் பிரச்னைகள் வந்தாலும் அதற்கான தேர்ச்சி பெற்ற மனநல மருத்துவர்கள், உளவியலாளர்களை அணுகி உரியச் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். சாமியார்களிடம் செல்வது, ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டுப் பரிகாரம் செய்வது என மனநலப் பிரச்னைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஆரோக்கியத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உடல்நலம், மனநலம், சமூக நலம் ஆகிய மூன்றையும் சரிவரப் பேணி காப்பதுதான் ஆரோக்கியம் என்று சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆரோக்கியம் என்பது வெறும் நோய்கள் வராமல் இருப்பது மட்டும் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. இதற்காக 'அரசின் இலவச தொலைப்பேசி எண் 14416 - நட்புடன் உங்களோடு மனநலச் சேவை' போன்ற திட்டங்களும் உள்ளன. இதற்கு அழைப்பு விடுத்து மனநலப் பிரச்னைகள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இலவசமாக அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நல்ல உடல் மற்றும் மன நலமும் நமக்கு இருந்தால் நீண்ட ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனிமேலாவது மனநலப் பிரச்னைகளைச் சரியாகக் கையாள்வோம் மக்களுக்கு மனநலம் பற்றிய மனத்தடைகள் நீங்க விழிப்புணர்வைப் பரப்புவோம்'' என்றார்.

உளவியலாளர் சுஜித் ஜீவி
உளவியலாளர் சுஜித் ஜீவி

அரசின் இலவச தொலைப்பேசி எண் 14416-ஐ தொடர்பு கொண்டு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தினோம். சைக்காலஜிஸ்ட் கெளதம் என்பவர் நம்முடன் பேசினார்.

''இந்த ஒன்றிய அரசின் சர்வீஸ் பெயர், டெலி மனாஸ் (Tele Manas - Tele Mental Health Assistance and Networking Across States). இது 24 மணி நேரம் செயல்படும். டோல் ஃப்ரீ நம்பர். இங்கே இருப்பவர்கள் அனைவருமே உளவியல் படித்த நிபுணர்கள்தாம். தொலைப்பேசி வழியாகவே உங்களுடைய மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு எங்களிடம் கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம். தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கும் கவுன்சலிங் வழங்குகிறோம்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது?

''சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் எனக்குக் கோபம் வருது டாக்டர். கையில கிடைச்சதைத் தூக்கி வீசறேன். பிள்ளைங்களை அடிச்சுட்டு, அப்புறம் நானே அழறேன். இது தப்புன்னு புரியுது. ஆனால், என்னால கோபத்தை கன்ட்ர... மேலும் பார்க்க

Mental Health: உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா; இல்லையா..? கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்!

'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது, வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கை... மேலும் பார்க்க

Doctor Vikatan: தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மாமனார்: முதுமைதான் காரணமா... சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan:என் மாமனாருக்கு 75 வயதாகிறது. மாமியாரும் அவரும் தனியே வசிக்கிறார்கள். சமீப காலமாக என் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். வெளியே செல்லும்போதும் இதைச் செய்கிறார். மறைந்திருந்து பார்த்... மேலும் பார்க்க

Mental Health: ``கூச்சப்படாதீங்க.. மனம் விட்டு அழுதிடுங்க" - மருத்துவர்கள் சொல்வதென்ன?

உடல் வலி மற்றும் மனவலியை வெளிப்படுத்தும் முக்கியமான வடிகால் கண்ணீர்; அதை ஒருபோதும் அடக்கிவைக்காதீர்கள் என்கிறது மருத்துவ உலகம்.கண்கள்Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்!சரி... மேலும் பார்க்க