செய்திகள் :

`மனைவி வீட்டு வேலைக்காரி கிடையாது; சமைக்காமல் இருப்பது கொடூரம் ஆகாது' - மும்பை உயர் நீதிமன்றம்

post image

மும்பையை சேர்ந்த கணக்கு தனிக்கையாளர் தனது மனைவி வீட்டு வேலைகளை செய்ய மறுப்பதாக கூறி குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். அதோடு அப்பெண்ணிற்கு பராமரிப்பு செலவுக்கான தொகையும் கொடுக்க உத்தரவிடமுடியாது என்று குடும்ப நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனது மனைவி கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் வகுப்பு நடத்துவதாக கணக்கு தனிக்கையாளர் தரப்பில் தெரிவித்த வாதத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டது.

அதோடு திருமணமான சில மாதங்களில் வீட்டை விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பு 2010ம் ஆண்டு கோர்டில் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால மனைவி, குடும்ப நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பாரதி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மனைவி வீட்டில் சமையல் போன்ற எந்த வீட்டு வேலையும் செய்யாமல் திருமணமான சில மாதங்களில் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று கணக்கு தனிக்கையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ''மனைவி சமையல், சுத்தம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்யத் தவறினால் அது தானாகக் கொடுமையாகிவிடாது, திருமணம் என்பது சமமானவர்களின் கூட்டு, சேவை ஒப்பந்தம் அல்ல, மனைவிகள் வீட்டு வேலைக்கார பெண்ணாக கருதப்படுவதில்லை.

மனைவி தினசரி வேலைகளைச் செய்ய மறுப்பது மனக் கொடுமையாகாது'' என்று தெரிவித்த நீதிபதிகள், பராமரிப்பு தொகை மறுத்த உத்தரவையும் ரத்து செய்தனர். மனைவி நடத்தும்'கலை மற்றும் கைவினை' வகுப்பில் நிலையான வருமானம் வர வாய்ப்பு இல்லை என்றும் அதேசமயம், கணவர் கணக்கு தனிக்கையாளர் என்பதால், அவரைப் பராமரிப்பதற்கான தொழில்முறைத் தகுதியையும் வருமானத் திறனையும் கொண்டுள்ளார் என்று தெரிவித்ததுடன், மனைவிக்கு மாதம் ரூ.10,000 ஜீவனாம்சமும், அவரது குடியிருப்புக்காக மாதம் கூடுதலாக ரூ.10,000-ம் பெற உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்தது.

`வெளிநாடுகளில் நாட்டின் கவுரவத்தை பிரதமர் உயர்த்துகிறார்!' - புகழும் சரத் பவார்

பொதுமக்கள் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தவேண்டும், எரிபொருளை சேமிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அறிவு... மேலும் பார்க்க

Gen Z’s Cockroach Janata Party: இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

இந்திய சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற புதிய நையாண்டி இயக்கம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு நாட்களில் 40,000 உறுப்பினர்களை ஈர்த்த இந்த அமைப... மேலும் பார்க்க

உ.பி: மாணவி பாலியல் கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்த குற்றவாளிக்கு மாலை அணிவித்து மரியாதை- பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த சுசில் பிரஜாபதி என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வழக்கறிஞர் ஒருவ... மேலும் பார்க்க

கர்நாடகா: முகாமில் திடீரென மோதிக்கொண்ட யானைகள்; இடையே சிக்கிய சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சென்னையைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா துபாரே யானைகள் முகாமைச் ச... மேலும் பார்க்க

`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' - முதியவரின் விநோத செயல்

சிலர் தங்களது மரணத்திற்கு முன்பே தங்களது கல்லறை எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தங்களது கல்லறையை தாங்கள் உயிரோடு இருக்கும்போதே கட்டி வைத்துவிடுவர். ஆனால் மத்திய ... மேலும் பார்க்க

`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சமீப காலமாக கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த மனீஷ் குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள சைதாமா எ... மேலும் பார்க்க