செய்திகள் :

மயானமே மணமேடையான வினோதம்! - `டெஸ்டினேஷன் வெடிங்' என்ற பெயரில் கலாசார மீறலா?

post image

இன்றைய காலகட்டத்தில் தங்களின் திருமணத்தை உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், பல மணமக்கள் மிகவும் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடத்த வேண்டும் என்பதற்காக 'டெஸ்டினேஷன் வெடிங்' செய்ய விரும்புகின்றனர். ஓர் அழகான கடற்கரையோ அல்லது மலைப்பிரதேசமோ திருமண மண்டபமாக மாறுவது வழக்கம் தான், ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி, ஒரு மயானத்தையே தங்கள் மணமேடையாக மாற்றிய விசித்திரச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

AI

இந்த திருமணத்திற்காக உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா என்ற பகுதியில், ஒரு பழைமையான மயானத்தை அந்த ஜோடி தேர்ந்தெடுத்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன், மாலை மாற்றும் சடங்கிற்காக அந்தச் சுடுகாட்டையே ஒரு தற்காலிகத் திருமண மண்டபம் போல மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரித்துள்ளனர். வழக்கமாக அமைதி நிலவவும் அந்த இடத்தில், உரத்த இசையுடன் திருமணக் கொண்டாட்டங்கள் அரங்கேறியது, அங்கிருந்த உள்ளூர் மக்களின் கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

இந்தத் திருமண ஏற்பாடுகளைச் செய்த நிர்வாகம், அது ஒரு மயானம் என்றும் அங்கு மங்கலச் சடங்குகள் செய்வது முறையல்ல என்றும் மணமக்களிடம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இருப்பினும், மணமக்களின் பிடிவாதத்தால் இந்தத் திருமணம் நடந்துள்ளது. மேலும், அந்த மயானத்தை ஒட்டி ஒரு ஏரி அமைந்துள்ள நிலையில், அங்கு முதலைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அபாயகரமான பகுதி என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு, அந்த நீர்நிலைக்கு அருகிலேயே ஆபத்தான சூழலில் அவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

AI

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் நவீனத்துவத்தின் பெயரால் நிகழும் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எத்தகைய கொண்டாட்டமாக இருந்தாலும், அது ஓர் இடத்தின் சமூக நெறிமுறைகளையும் சட்ட விதிகளையும் மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

மாணவர்களை அலறவிடும் அணில்: பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தில், ஒரு சிறிய அணிலின் விசித்திரமான நடத்தை ஒட்டுமொத்த வளாகத்தையே திகைக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்களைக் கண்டாலே மர உச்சிக்கு ஓடும் ... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணத்துக்கு `தர்பூசணி காரணம் அல்ல' - இறந்தவர்கள் உடலில் விஷம்?

மும்பையில் கடந்த வாரம் தர்பூசணி சாப்பிட்டதால் அப்துல்லா என்பவரும், அவரது மனைவி மற்றும் மகள்கள் என்ற நான்கு பேர் இறந்தனர். அப்துல்லா தனது உறவினர்கள் 5 பேரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந... மேலும் பார்க்க

திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தையொட்டி ரஜினி கோவிலில் 16 வகை அபிஷேகத்துடன் வழிபாடு செய்த ரசிகர்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினிகாந்திற்கு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலில் கருங்கற்களால் ஆன இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்து 'ரஜினி கோவில்' என பெயர் சூட... மேலும் பார்க்க

"கணவர் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்" - குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் மும்பைப் பெண்

மும்பை கல்யான் பகுதியைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற 25 வயது பெண் தனது 3 வயது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். கோமல் கெய்க்வாடிற்கு 18 வயதில் திருமண... மேலும் பார்க்க

`உழைக்கும் வர்க்கமே... உலகம் உனதே!' - `May 1' தூய்மை காக்கும் தொழிலாளர்கள் | புகைப்படத் தொகுப்பு!

தூய்மை பணியாளர்களின் சேவையை பாரட்டுவோம்தூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணிய... மேலும் பார்க்க

`மராத்தி மொழி கட்டாயம் கத்துக்கணும்' - ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு கெடு நீட்டிப்பு!

மகாராஷ்டிராவில் மும்மை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற பகுதியில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மராத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்... மேலும் பார்க்க