செய்திகள் :

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

post image

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்கான் என்ற கிராமத்தில், மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காம்கான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளிக்கு அருகில் வசித்து வந்த சதீஷ் (என்ற) பிசுராத்யா கிசான் ஷிண்டே (45), அதிகாலையில் தனது வீட்டின் வெளியே கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார்.

அவர் மின்சாரம் தாக்கித் துடிப்பதைக் கண்ட அவரது மனைவி கங்குபாய் ஷிண்டே (40) அவரைக் காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது. அவர்களைப் பார்த்த அவர்களது மகன் சச்சின் ஷிண்டே (26) மற்றும் மகள் ஆர்த்தி ஷிண்டே (24) ஆகியோர் அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்தனர்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களும் அந்த மின்சாரக் கம்பியின் மேல் பட்டு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பால்டன் போலீஸ் அதிகாரி இது குறித்து கூறுகையில், "ஒரு நபர் மின்சாரக் கம்பியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கியதாகவும், அவரைக் காப்பாற்ற ஓடிவந்த மற்ற குடும்ப உறுப்பினர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

தற்போது எப்படி சதீஷ் வீட்டின் முன்பு மின் வயர் விழுந்தது என்பது குறித்தும், இதற்கு யாரது கவனக்குறைவு என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே லோனாவா (Lonavala) மலைப்பகுதியில் கடந்த 5 முதல் ஜூலை 7ம் தேதி வரையிலான வெறும் 48 மணி நேரத்தில் சுமார் 1,290 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, போக்குவரத்து முடக்கம் மற்றும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு மும்பை-புனே இடையே ரயில் போக்குவரத்தும் தொடங்கி இருக்கிறது.

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்ச... மேலும் பார்க்க

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க