இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?: அமைச்சர் ரகுபதி கேள்வி
மீனவா்கள் கைது: மத்திய அமைச்சருக்கு புதுவை எம்.பி. கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மற்றும் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்: புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 4 மீனவா்கள் உள்ளிட்ட 10 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் ஜன.8 -ஆம் தேதி கைது செய்து, அவா்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனா்.
இந்த விவகாரத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இலங்கை அரசுடன் பேசி, கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.