செய்திகள் :

முடிந்த மௌன ராகம்; மீண்டும் அரவணைத்து கொண்ட மலையாள டிவி - தமிழில் நடிக்க ஏங்கும் காரைக்குடி ஐஸ்வர்யா

post image

தமிழ்நாட்டில்தான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றொரு கருத்து முன்பு இருந்தது. 'சித்தி', 'மெட்டி ஒலி' ஆகிய தொடர்கள் இங்கு சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம். கடைசியாக சன் டிவியில் 'ரோஜா' தொடர் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பானது.

ஆனால் மலையாள சீரியல் ஏரியாவிலும் கடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த 'மௌன ராகம்' தொடர், தற்போது முடிவடைந்திருக்கிறது.

இந்த தொடர் தொடர்புடைய இன்னொரு செய்திதான் இங்கு ஹைலைட். மலையாள 'மௌன ராக'த்தின் ஹீரோயினாக சுமார் 1700 எபிசோடுகள் வரை நடித்தது நம்மூர்ப் பொண்ணு ஐஸ்வர்யா ராம்சாய்.

ஐஸ்வர்யா தமிழில் 'சுமங்கலி', 'கல்யாண வீடு', 'பாரதிதாசன் காலனி' முதலான சில தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியல் தராத பெயர், புகழை மலையாள சின்னத்திரை தந்துள்ளது. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் 'மகா' வாக நடித்த கீதாஞ்சலியின் உடன் பிறந்த சகோதரி இவர்.

மலையாள சின்னத்திரையில் இவர் கலக்குவது குறித்து முன்பே விகடனுக்குப் பேசியிருந்தார்.

Director Thirumurugan

'திருமுருகன் சார் இயக்கிய சில சீரியல்களில்தான் ஆரம்பத்துல இங்க நடிச்சிட்டிருந்தேன். அந்தச் சமயத்துலதான் ‘மௌனராகம்’ மலையாள சீரியல் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங்லாம் கேரளாவுல இருக்குமேன்னு சின்னத் தயக்கம் இருந்தாலும் வர்ற வாய்ப்பை விட்டா எப்படினு தோண, சரி சொல்லிக் கிளம்பியாச்சு. சொந்த ஊரான காரைக்குடியிலிருந்து எங்க அம்மா எனக்காகவே கேரளா கிளம்பி வந்துட்டாங்க. ஆரம்பத்துல ஷூட்டிங் இருக்கிற நாள்கள்ல மட்டும் கேரளாவுல இருந்துட்டு ஷூட்டிங் முடிஞ்சா ஊருக்கு வந்திடுவோம். ஆனா போகப் போக, அந்த சீரியல் எனக்குத் தந்த ரீச் எங்களை அங்கேயே தங்க வச்சிடுச்சு.

சீரியல்ல கல்யாணிங்கிற என்னுடைய கேரக்டருக்கு மலையாள மக்கள் தந்த‌ ஆதரவு நான் எதிர்பாராதது. சீரியல்ல நடிகக் கமிட் ஆன கொஞ்ச நாள்லயே மலையாளம் நல்லா கத்துக்கிட்டேங்கிறதால என்னை மலையாளப் பொண்ணுன்னே நினைச்சி அவங்க வீடுகள்ல ஒருத்தியா நினைச்சாங்க" என்றிருந்தார், அப்போது.

தற்போது அந்த தொடர் முடிவடைந்து சொந்த ஊரான காரைக்குடிக்குத் திரும்பியிருக்கிற ஐஸ்வர்யாவிடம் பேசினோம்.

ஐஸ்வர்யா

``கேரள மக்கள் என் மீது காட்டின அன்பை வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். இங்க சாதாரண துணை கதாபாத்திரங்களில் நடிச்சிட்டிருந்தப்ப இப்படியொரு வாய்ப்பு வரும்னு எதிர்பார்க்கலை. இன்னும்கூட கேரள மக்கள் என்னை விடுவதாய் இல்லை. 'மௌனராகம்' முடிஞ்ச சூட்டோடயே இன்னொரு சீரியல்லயும் கமிட் ஆகிட்டேன். ஆனா 15 டு 30 தான் ஷூட்டிங்.. அதனால மாதத்தின் முதல் பாதி நாள்கள் தமிழில் சீரியல் பண்ண வாய்ப்பு வந்தால் பண்ணலாம்னு தோணுது. உள்ளூரில் கொண்டாடப்படணும்னு எனக்கும் ஆசை இருக்காதா?" என்கிறார்.

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க

நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட... மேலும் பார்க்க

Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முத... மேலும் பார்க்க

"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." - 'வாணி ராணி' ஜெனிப்ரியா

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்தில... மேலும் பார்க்க

''இலங்கை டு சரிகமப நிகழ்ச்சி பயணம்" - 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' பைனலிஸ்ட்கள் பேட்டி

'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு தற்போது ஆறு பேர் பைனலிஸ்டாகத் தேர்வாகியுள... மேலும் பார்க்க