சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
முத்துநாயக்கன்பட்டியில் புதிய கட்டடங்கள் திறப்பு
பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு இரு புதிய கட்டடங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். பின்னா், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களை அமைச்சா் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் ரூ.400 கோடியில் 333 மெட்ரிக் டன் நெல் மணிகளை சேமிக்கும் வகையில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் 2.21 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க 3.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், 2.74 லட்சம் அரிசி மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி வெளி மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தில் ரூ.22.50-க்கு வாங்கப்பட்ட ஒரு கிலோ அரிசி தற்போது, ரூ.35-க்கு வாங்கப்படுகிறது என்றாா் அவா்.
இதில் மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, ஒன்றியச் செயலா் சுப்ரமணி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.