Soori: `இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம்!' - ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட...
``முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நேற்று இந்தியா வந்த புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரவுபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முக்கியத் தலைவர்களுக்கு இவ்விருந்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் இதில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் எம்பி சசிதரூர் மட்டும் பங்கேற்றிருந்தார்.

இவ்விருந்தில் இந்தியாவின் பல்வேறு வகையான உயர்தர சைவ உணவுகள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன.
முருங்கை இலை சாறு, தென்னிந்திய ரசம், காஷ்மீரி வால்நட்டால் செய்யப்பட்ட குச்சி டூன் செடின், பான்-கிரில் செய்யப்பட்ட கருப்பு பயறு கபாப்ஸான காலே சேன் கே ஷிகாம்பூரி, காரமான சட்னியுடன் கூடிய காய்கறி ஜோல் மோமோ என காஷ்மிர் முதல் தென்னிந்தியா வரையிலான உணவுகள் முதலில் பரிமாரப்பட்டிருக்கின்றன.
ஜஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேத்தி மட்டர் கா சாக், தந்தூரி பர்வான் ஆலு, ஆச்சாரி பைங்கன் மற்றும் மஞ்சள் தால் தட்கா, உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூ புலாவ் ஆகியவற்றுடன் லச்சா பரந்தா, மகஸ் நான், சதனாஜ் ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி மற்றும் பிஸ்கு போன்ற இந்திய ரொட்டிகளுடன் பிராதான உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

பாதாம் கா ஹல்வா, கேசர்-பிஸ்தா குல்ஃபி, புதிய பழங்கள், குர் சந்தேஷ், முரக்கு போன்ற பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் உள்ளிட்டவைகளுடன் மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய ஜூஸ்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பரிமாரப்பட்டிருக்கின்றன.
விருந்தை முடித்த கையோடு இந்திய பரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 'அமிர்தவர்ஷினி', 'காமஜ்', 'யமன்', 'சிவரஞ்சினி', 'நளினகாந்தி', 'பைரவி' மற்றும் 'தேஷ்' போன்ற இந்திய ராகங்களும், கலிங்கா மற்றும் சாய்கோவ்ஸ்கியின் நட்கிராக்கர் சூட்டின் பகுதிகள் உள்ளிட்ட ரஷ்ய மெல்லிசைகளும், பிரபலமான இந்தி திரைப்படப் பாடலான 'ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி'யும் இந்த இசைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.




















