செய்திகள் :

மௌனம் பேசியதே: "என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு" - நடிகை லைலா

post image

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது.

சில தினங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.

மௌனம் பேசியதே
மௌனம் பேசியதே

தற்போது லைலா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " 23 வருடங்களுக்கு முன்னாடி 'மௌனம் பேசியதே' படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அமீர் சார் என்னிடம் பேசினார்.

என்னுடைய ஹீரோ சூர்யா சார், த்ரிஷா ஆகியோருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

23 வருடங்களுக்குப் பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு பிப். 13 ஆம் தேதி இந்தப் படம் ரீ- ரிலீஸ் ஆகிறது.

காதலால் நிரம்பிய படம்தான் 'மௌனம் பேசியதே'. அதனால் இந்தச் சமயத்தில் இந்தப் படம் வெளியாவது சந்தோஷமாக இருக்கிறது.

லைலா
லைலா

எல்லோரும் மீண்டும் இந்தப் படத்தை தியேட்டரில் கொண்டாடப்போகிறோம். 'நான் உன்னை மறக்கவும் மாட்டேன், நினைக்காமல் இருக்கவும் மாட்டேன்'.

பிப். 13 ஆம் தேதி என்னுடைய ஹீரோ சூர்யாவுடன் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க இருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Kadhalar Dhinam: பரபரப்பான மும்பை ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' பட சுவாரஸ்யங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு 'உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90... மேலும் பார்க்க

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க

"இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!"- சரத்குமார்

'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார்.கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில... மேலும் பார்க்க

"அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்"- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்

‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெள... மேலும் பார்க்க