செய்திகள் :

ரத்தன் டாடா வாழ்ந்த வீடு; ரூ.17.6 லட்சம் வாடகைக்கு விட்ட டாடா நிறுவனம் - நோயல் டாடா குடியேற முடிவு?

post image

தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தென்மும்பையில் 3 மாடிகள் கொண்ட பக்தவார் என்ற கட்டடத்தில் வசித்து வந்தார். இக்கட்டடம் மும்பை கொலாபா பகுதியில் இருக்கிறது. 13,200 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் ரத்தன் டாடா இறக்கும் வரை வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு அந்த வீடு டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கிளை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அந்த வீட்டை டாடா சன்ஸ் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து இருக்கிறது.

ரத்தன் டாடா 2024ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இறந்தார். அவர் இறந்த அடுத்த நாளான அக்டோபர் 10ம் தேதியில் இருந்து இந்த குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ரூ.17.60 லட்சம் மாத வாடகையாகும்.  இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது அக்டோபர் 10, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நோயல் டாடாவுடன் ரத்தன் டாடா

மொத்தம் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாத வாடகையில் 10 சதவீத உயர்வு இருக்கும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர வட்டி இல்லாத பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ. 10 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ. 4.63 லட்சம் முத்திரை வரியாக (Stamp duty) செலுத்தப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இந்த வீடு டாடா குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானது ஆகும். இந்த வீட்டை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈவார்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் பல்வேறு பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் சிறு பங்குகளைக் கொண்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி ரத்தன் டாடா வசித்து வந்த வீட்டின் மதிப்பு ரூ.150 கோடியாகும். மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு வாரியம் கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த கட்டடம் மிகவும் சிதிலடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டில் இக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த வீடு ரத்தன் டாடாவிற்கு டாடா குழுமம் தனது விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.

அவர் மறையும் வரை அவர் டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக இருந்ததால் அவருக்கு இந்த வீடு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பிரபல கட்டடக் கலைஞர் ரத்தன் பாட்லிபாய் உதவியுடன், ரத்தன் டாடாவே இந்த வீட்டை வடிவமைத்து தனது விருப்பப்படி கட்டினார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நோயல் டாடா இந்த இல்லத்திற்கு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.

 நோயல் டாடா தற்போது மும்பையின் கஃப் பரேடில் உள்ள விண்டர்மேர் என்ற ஆறு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த இல்லம் காலியாக இருப்பதைத் தவிர்க்கவும், டாடா குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடரவும் நோயல் டாடா இங்கு குடியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நோயல் டாடா அல்லது குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் தங்குவதற்கு ஏதுவாகச் செய்யப்பட்ட ஏற்பாடாகவே டாடா சன்ஸ் நிறுவனம் இந்த இல்லத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஸ்கூட்டர் டிக்கிக்குள் பச்சிளம் குழந்தை - பேரதிர்ச்சியூட்டும் தாயின் செயல்.. கொதிக்கும் இணையவாசிகள்!

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம், ஒட்டுமொத்த இணையதளத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாய் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கைக்... மேலும் பார்க்க

Elon Musk house: 400 சதுர அடி வீடுதான்; தாய் தங்குவதற்குகூட இடமில்லை; வியக்கவைக்கும் மஸ்க்கின் எளிமை

உலகின் நம்பர் 1 பணக்காரர் என்றால், கோல்டன் கேட்கள், டஜன் கணக்கான படுக்கையறைகள் மற்றும் பிரமாண்ட நீச்சல் குளங்கள் கொண்ட அரண்மனையில்தான் வாழ்வர் என்று நாம் நினைப்போம். ஆனால், எலான் மஸ்க் அனைத்தையும் தலை... மேலும் பார்க்க

`எனது மகளுக்கு திருமணம்' - மார்க்கெட்டில் கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியாமல் கதறி அழுத விவசாயி

விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது விளைபொருள் விற்பனை செய்யப்படாமல் போனதால் கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தி... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண் மோனலிசா.! கேரளாவில் காதல் திருமணம்! பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது வசீகர புன்னகையாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள... மேலும் பார்க்க

திடீரென தாக்கிய சிறுத்தை; எதிர்த்துப் போராடி, கொன்று உயிர்தப்பிய 18 வயது மாணவன் - அதிர்ச்சி சம்பவம்!

வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் அடிக்கடி வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தில் ஒரு வயதான சிறுத்தை 18 வயது மாணவனை தா... மேலும் பார்க்க

ஆழ்கடல் மர்மம்: 3000 அடி ஆழத்திலிருந்து கரைக்கு வந்த 'ராட்சத நாகங்கள்' | Doomsday Fishes வீடியோ!

மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் (Cabo San Lucas) கடற்கரைக்குச் சுற்றுலா சென்றவர்களுக்கு அண்மையில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆழ்கடலில் மட்டுமே வாழக்கூடிய, 'ஓர்ஃபிஷ்' (Oarfish) எனப்படும் இரண்டு ராட்ச... மேலும் பார்க்க