செய்திகள் :

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

post image

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற ராஜா, அங்கு வரவேற்பாளராகப் பணிபுரியும் பெண்ணிடம் பயணம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

பயண ஏற்பாட்டாளர் ராஜா
பயண ஏற்பாட்டாளர் ராஜா

அந்தப் பெண் பயண ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ராஜா அந்தப் பெண்ணின் உடலில் கிள்ளி பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் ஹோட்டல் மேலாளரிடம் இது குறித்து புகார் செய்ததுடன், வீட்டிற்குச் சென்று தனது கணவரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜாவிடம் இது குறித்து செல் போனில் கேட்டுள்ளார்.

அப்போது எதிர் தரப்பில் பேசிய பயண ஏற்பாட்டளரான ராஜா, பாதிக்கபட்ட பெண்ணையும், அவரது கணவரையும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து அப்பெண் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளித்தார்.

பாலியல் சீண்டல்

இதனைத் தொடர்ந்து பயண ஏற்பாட்டாளர் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த ராஜா போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தலைமறைவான ராஜாவை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க