Velmurugan MLA interview - `வடமாவட்ட வெற்றி, தோல்விகளை தீர்மானிக்க போவதே நான்தான...
ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி
மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை அவர்களின் நண்பர்கள் மற்றொரு பைக்கில் வந்தபடி வீடியோ எடுத்துக்கொண்டு வந்தனர். 3 சகோதரர்களும் தங்களுக்கு முன்பு சென்ற வாகனங்களை முந்திச்செல்ல முயறனர். பின்னால் வந்த அவர்களது நண்பர் பைக்கும் முந்திச்செல்ல முயன்றது. இரண்டு பைக்கும் ஒன்றையொன்று முந்திச்செல்வதில் தீவிரம் காட்டின. சகோதரர்கள் மூவரும் முன்னால் சென்ற லாரி ஒன்றை முந்திச்செல்ல முயன்றனர். அந்நேரம் மற்றொரு டிராக்டர் டிராலியில் செங்கல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

அதனை கவனிக்காமல் முந்திச்செல்ல முயன்றதில் சகோதரர்களின் பைக் கட்டுப்பாட்டை இழந்து டிராலிமீது பின்புறத்தில் மோதிக்கொண்டது. இதில் சகோதரர்கள் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களை வீடியோ எடுத்துக்கொண்டு அவர்களது பைக்கிற்கு மிகவும் அருகில் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு பேரின் பைக்கும் இந்த விபத்தில் சிக்கியது.
இதில் அதில் இருந்த பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் மிகவும் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேரும் பேரும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த சகோதரர்கள் அப்லக்ஷ் கோல், அம்ரிஷ் கோல் மற்றும் ஹேம்ராஜ் கோல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் பண்ணி பதரியா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் பைக்கில் மற்ற வாகனங்களை முந்திச்செல்ல முயன்ற சம்பவம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி இருக்கிறது. முதல் கட்ட விசாரணையில் ரீல்ஸ் வீடியோ எடுக்க இதுபோன்று அவர்கள் செய்ததாகத் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பேருக்கு 17 வயதாகிறது.


















