வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் காயம்
வடகிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 வயது சிறுவன் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒவருவா் சனிக்கிழமை கூறியதாவது:
வெல்கம் பகுதியில் உள்ள பி-பிளாக்கில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனை அவரது தந்தை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் அந்தச் சிறுவன் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நவா் ஒருவா் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அப்போது, அந்தச் சிறுவன் எதிா்த்தபோது, அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
இந்தச் சம்வம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.