செய்திகள் :

`வரவு செலவுகளை ஆர்த்தி தான் பார்க்குறாங்க; அவங்க இல்லைன்னா.!'- மனைவி குறித்து சிவகார்த்திகேயன்

post image

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் (பிப்.27) வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தாய் கிழவி
தாய் கிழவி

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று (மார்ச்.11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தி குறித்து பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

"எனக்கு திருமணம் ஆன நாளில் இருந்து என் மனைவி ஆர்த்திதான் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கிறார். என் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது. ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட டிக்கெட்டிற்கு பணம் கொடு என்று ஆர்த்தியிடம்தான் கேட்பேன்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஆர்த்தி கொடுப்பதை சாந்தோஷமாகவும், பெருமையாகவும் வாங்கிக் கொள்கிறேன். அதை பெருமையாகவும் நினைக்கிறேன். அவர் பார்த்துக்கொள்ளவில்லை என்றால் என்னால் தயாரிப்பாளராக ஆகியிருக்க முடியாது. இந்தப் படத்தைப் பார்த்தப்போது ஆர்த்தி எனக்கு ஒரு பவுனுத்தாயாகத் தெரிந்தாள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மின் பேட்டி

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது.புதுமையான திரைமொழி, தமிழின் முதல் நியோ நாயர் திரைப்படம் என புதியதொரு பார்முலாவை தமிழ் சினிமாவுக்கு இப்படம் அறி... மேலும் பார்க்க

``8 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் எல்லை தாண்டிவிட்டீர்கள்" - ராஷ்மிகா காட்டம்

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.ராஷ்மிகா திருமணம் முடிந்ததில் இருந்தே அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல... மேலும் பார்க்க

Hansika: 4 ஆண்டு திருமண வாழ்க்கை - விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை!

கடந்த 2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து 'வேலாயுதம்', 'அரண்மனை', 'ரோமியோ ஜுலியட்', 'சிங்கம் 2', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களில் நடித்... மேலும் பார்க்க

தாய் கிழவி: "எங்க அப்பா இன்னும் சாகல.!"- மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக... மேலும் பார்க்க