`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராம...
விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்
தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் கட்சியின் முடிவு. மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் நாங்கள் இதை சொல்லவில்லை.
இது எங்கள் கொள்கை முடிவு. கூட்டணி குறித்து தலைவர் இறுதி முடிவு எடுப்பார்.

திமுக ஆட்சி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியும். மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் திமுகவுடன் தேமுதிக சேர்ந்திருப்பது அவர்களின் முடிவு. தோற்றுப்போகும் கட்சியுடன் இணைந்து அவர்களும் தோற்கப்போகிறார்கள்.
மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்று தலைவர் விஜய் சொல்லியிருக்கிறார். இருந்தும் எல்லோரும் பாஜகவை எதிர்த்து எதுவும் பேசவில்லை என்கிறார்கள்.
முன்பெல்லாம் அவர்கள் அழுத்தம் கொடுக்க வில்லை. தலைவர் பேசிய பிறகு தான் பாஜக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீஸ் பிரச்னை என எல்லாமே உங்களுக்கும் தெரியும்.
இவ்வளவு அழுத்தங்களுக்கு பிறகும் மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்று தான் தலைவர் சொல்கிறார். இதற்கு மேல் என்ன சொல்லவேண்டும் ?" என்று பேசியிருக்கிறார்.















