செய்திகள் :

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

post image

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது “ஆளுங்கட்சி எப்போதும் யாரும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூற மாட்டார்கள், 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என தி.மு.க. கூறலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் மக்கள் இதனை ஒப்புக் கொள்ளவில்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

`தே.மு.தி.க. கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும்'

அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது அந்தந்த கட்சிகளின் நம்பிக்கை மற்றும் நிலைப்பாடு அதனைக் குறை சொல்லக் கூடாது.

தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் இது எங்களின் நம்பிக்கை.

எஸ்ஐஆர் தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகின்றன. வாக்குகள் திருடப்படுகின்றன. இருக்கின்ற வாக்குகள் நீக்கப்படுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் சமயத்தில் பேசுவது இது முதல் முறை அல்ல. நம்முடைய வாக்கை நாம் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கட்சி ஆரம்பித்து 20 வருடங்களாக அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறோம். தேர்தலில் பல்வேறு தவறுகள் நடப்பது உண்மை. ஆதாரபூர்வமாக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுத்ததே இல்லை.

`விவசாயிகளுக்காக பிரதமர் வருவது வரவேற்கத்தக்கது'

பிரதமர் வருகையை வரவேற்கிறேன். விவசாய மாநாட்டில் கலந்து கொள்வது என்பது விவசாயிகளுக்கான பெருமையாகப் பார்க்கிறேன்.

விவசாயிகளுக்காக வருவது வரவேற்கத்தக்கது. தேமுதிக விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பக்கபலமாக இருப்போம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள்

விவசாயம் செய்து உழைத்து நெல் கண் முன்னே வீணாக போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெல் ஈரப்பத சதவீதத்தை உயர்த்த வேண்டும்.

விளைவித்த அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். நிறைய புறம்போக்கு இடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏன் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் உருவாக்க கூடாது?

தொடர் போராட்டம்

மக்கள் நல பணியாளர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் செவிலியர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், அனைத்து இடங்களிலும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம், ஊதிய நிரந்தரம் தான் கேட்டுள்ளனர். அதைப் பற்றி கூறாமல் உணவு இரண்டு வேளை கொடுக்கிறோம் என அரசு கூறுகிறது. உணவு என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் கேட்கும் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

நேற்று இரவு வத்தலக்குண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“ 2026-ல் தே.மு.தி.க. ஆட்சி அமைந்தவுடன், வத்தலக்குண்டில் புதிய மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன்.

வத்தலகுண்டு நகராட்சியை தரம் உயர்த்துவேன். நிலக்கோட்டையில் செண்ட் ஃபேக்டரி கொண்டுவருவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன்” என்றார்.

``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு

நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல்... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

"2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நட... மேலும் பார்க்க

``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா!" - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.இவ்வாறிருக்க மத்திய அரசு, மேல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 ... மேலும் பார்க்க