செய்திகள் :

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

post image

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணியளவில் மோடி கோவை வருகிறார்.

அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி

அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார்.

நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மோடியுடன் இணைந்து, எடப்பாடி பழனிசாமியும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மதியம் 3.30 மணியளவில் அவர் டெல்லி திரும்பவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு நிலவுகிறது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித... மேலும் பார்க்க

``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா!" - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.இவ்வாறிருக்க மத்திய அரசு, மேல... மேலும் பார்க்க

SIR: ``திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா

"ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது" என்று மதுரை புறநகர் கி... மேலும் பார்க்க

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: "அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி?" - எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க

"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" - K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்... மேலும் பார்க்க