"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" - அமைச்சர் சம்ப...
வீட்டின் மீது தாக்குதல்: `செத்த பிறகுதான் வருவீர்களா?'- போலீஸிடம் கடுகடுத்த மகாராஷ்டிரா அமைச்சர்!
மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் சஞ்சய் ஷிர்சாத்திற்கு சாம்பாஜி நகரில் வீடு இருக்கிறது. சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது இல்லத்தின் மீது நேற்று நள்ளிரவில் மூன்று இளைஞர்கள் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர்கள் குடிபோதையில் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது இரண்டு போலீஸாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து மாநில போலீஸ் நிர்வாகத்தை அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் கடுமையாக விமர்த்துள்ளார். அதோடு சிவசேனாவை சேர்ந்த அமைச்சரான சஞ்சய், போலீஸார் மீது கடும் கோபம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,'' நகர போலீஸ் கமிஷனர் தனது பொறுப்புகளை விட தனது அடுத்த பதவியின் மீதுதான் கவனம் செலுத்துகிறார்.

போலீஸ் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் குற்றங்களை கட்டுப்படுத்துவதை விட பணம் சம்பாதிப்பதிலும், லாபகரமான பதவிகளை பெறுவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
சட்டவிரோத சூதாட்டக் கூடங்கள் போலீஸாரின் ஆசியுடன் இயங்குகின்றன. இது தொடர்பான முழுப் பட்டியலையும் முதலமைச்சரிடம் ஒப்படைப்பேன். நாங்கள் செத்த பிறகுதான் போலீஸ் வருமா?. எனது வீட்டில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. நகரில் தினமும் கொலைகள் நடக்கின்றன. போலீஸ் கமிஷனர் மிரட்டி பணம் பறிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். அதே நேரத்தில் போதைப்பொருள் வெளிப்படையாக விற்கப்படுகிறது.
எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டரை மணி நேரம் கழித்து துணை போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்தார். அதுவும் டிஜிபி தலையிட்ட பின்னரே இது நடந்தது" என, அவர் குற்றம் சாட்டினார். தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் நகர போலீஸ் கமிஷனரை போனில் தொடர்பு கொள்ள அமைச்சர் முயன்றார். ஆனால் போன் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்கள் முதலில் தங்கள் வாகனத்திலிருந்து கீழே விழுந்து, அந்த இடத்தை விட்டு வெளியேறி சென்றர். பின்னர் பங்களாவின் பிரதான வாயிலுக்கு சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் அவர்கள் மதுபாட்டில்களைக் காட்டி வீட்டை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.



















