செய்திகள் :

வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்

post image

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே விமானம் இருக்கும், தெருக்கள்தான் இங்கு விமான ஓடுதளங்கள்.... படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? இந்த நகரம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள 'கேமரூன் ஏர்பார்க்' என்ற இந்த நகரம் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவின்படி, கார்களுக்குப் பதிலாக விமானங்கள் நிறைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி காட்சியளிக்கிறது.

cameron airpark

வைரலாகும் வீடியோவில், வீடுகளுக்கு வெளியே சிறிய ரக விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த விமானங்கள் வெறும் பொருள்கள் அல்ல.

நகரத்தின் தெருக்கள் அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக தெருவில் ஓட்டிச் சென்று, அங்கிருந்தே வானில் பறக்க முடிகிறது. தெருவின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரன்வே இதற்கு உதவியாக உள்ளது.

இந்த நகரத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள போக்குவரத்து சிக்னல்கள், வழக்கத்தை விட தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளன. விமானங்களின் இறக்கைகள் மீது மோதாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேமரூன் ஏர்பார்க் 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், இங்கு பணியில் இருக்கும் விமானிகளும் குடியேறத் தொடங்கினர். தற்போது விமானப் போக்குவரத்து மீது ஆர்வம் கொண்ட பலரும் இங்கு வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க