செய்திகள் :

"வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில்.." - சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்!

post image

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தாமல் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது.

இங்கு, சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சி.வி. சண்முகத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சிவி சண்முகம்

அந்த அறிக்கையில், "சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கட்சிகள் எப்படி கொள்கைரீதியாக வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது.

ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரியை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.

மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது, விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது, நடுத்தர வர்க்க பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்.

இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

நடிகர் சங்கத்தின் அறிக்கை
நடிகர் சங்கத்தின் அறிக்கை

அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும். அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்.

இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம்... தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்...." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சூர்யாவின் 'கருப்பு'வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்' ஷூட்டிங் - பரபர அப்டேட்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் 'அரசன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கிறது. 'அரசன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பல வாரங்கள் ஆனதும்... மேலும் பார்க்க

Happy Raj: "பஞ்சாயத்துக்கு தீர்ப்பு வழங்கபோய் நம்ம படத்தை செஞ்சிட போறாங்க'ன்னு.!"- விஜய் சேதுபதி

பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ், கெளரி பிரியா நடித்திருக்கும் படம் 'ஹேப்பி ராஜ்'. பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் மார்ச் 27 ... மேலும் பார்க்க

Jailer 2 Exclusive: 'ஜெயிலர் 2'வில் ஷாருக்கான் கேமியோ; சண்டிகரில் படமாகும் காட்சிகள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ரஜினி காந்த் படம் ரிலீஸாகும். இப்போது, 75 வயதில் 'ஜெயிலர் -2', அடுத்து ஏப்ரல் மாதத்தில் சிபி சக்ரவர்த்தி டைரக்ஷனில் நடிக்கப் போகிறார். இ... மேலும் பார்க்க

Sai Abhyankkar: "ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன்" - சாய் அபயங்கர்

'கருப்பு', அட்லீ - அல்லு அர்ஜூன் திரைப்படம், தனுஷின் 55-வது படம் எனப் பிரமாண்ட லைன்-அப்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். சுயாதீனப் பாடல்கள் மூலம் மியூசிக் கரியரைத் தொடங்கியவர் இ... மேலும் பார்க்க

"நான் லைம்லைட்டுல இருந்து கொஞ்சம் மறைஞ்சுட்டேன்" - 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புளி பேட்டி

தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்... மேலும் பார்க்க

அடியே... (பேச்சுலர்) : "இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்!" - ஜிகேபி | வரித்துணையே 9

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க