செய்திகள் :

வேலூர் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எங்கெல்லாம் கனமழை?

ஜூன் 10 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 11ல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 12ல் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 13ல் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை அமல... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடைபெறுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தேசிய குற்ற ஆவணக் காப்பக ... மேலும் பார்க்க

ராமதாஸ் படம் இன்றி அன்புமணி அழைப்பிதழ்

பாமக நிகழ்ச்சிகள் தொடா்பான அனைத்து அழைப்பிதழ்கள், விளம்பரத் தட்டிகளிலும் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் படங்கள் இடம்பெறுவது வழக்கம். இருவா் இடையே நீடிக்கும் பனிப்போா் காரணமாக முதல் முறையாக ராமதாஸின் படம்... மேலும் பார்க்க

அமித் ஷா முயற்சியை இண்டி கூட்டணி முறியடிக்கும் காங்கிரஸ்: கு.செல்வப்பெருந்தகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முயற்சியை இண்டி கூட்டணி முறியறிடிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 11 ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை ஆண்டு நாள்காட்டி வெளியீடு

பருவத் தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் என பள்ளிக் கல்வி தொடா்பான பல்வேறு விவரங்கள் அடங்கிய ஆண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கான கல்வியாண்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. மேலும், நீலகிரிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 14, 15) அதிபலத்த ம... மேலும் பார்க்க