செய்திகள் :

ஸ்டேஷனில் 8 மணி நேரம்; மருத்துவமனையில் 10 மணி நேரம் - பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமி அலைக்கழிப்பு

post image

மகாராஷ்டிரா மாநிலம், பீட் என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவர் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண்ணை கை, கால்களை கட்டிவிட்டு, கர்ச்சீப்பால் வாயை அடைத்துவிட்டு அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு அவரின் உறவினர்கள் மாலையில் காவல் நிலையத்திற்கு புகார் செய்யச் சென்றனர். போலீஸார் மைனர் பெண்ணையும், உறவினர்களையும் சிறிது நேரம் இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் பல மணி நேரம் ஆன பிறகும் புகாரை போலீஸார் பதிவு செய்யவில்லை. இரவு முழுவதும் அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் காத்துக் கிடந்தனர். அதிகாலை 5 மணிக்குத்தான் அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இதற்காக அவர்கள் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அப்பெண்ணை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அப்பெண் தனது குடும்பத்தோடு சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்ய பெண் டாக்டர் இல்லை. அப்பெண் தனது பெற்றோருடன் பல மணி நேரம் காத்துக்கிடந்தார். டாக்டர் வருவதற்கான அறிகுறி இல்லை. இதனால் அப்பெண் வீட்டுக்கு செல்வதும், வந்து விசாரிப்பதுமாக இருந்தார். காலை 11 மணிக்கு அப்பெண் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் இரவு 9 மணிக்குத்தான் பெண் டாக்டர் மருத்துவமனைக்கு வந்து அப்பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்தார். அதாவது 10 மணி நேரம் மருத்துவ பரிசோதனைக்காக காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசு நிர்வாகம் இப்படி அலட்சியமாகச் செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்மிகம் டு நட்பு; நோ சொன்ன இளம்பெண்; AI மூலம் ஆபாசமாக சித்திரித்த சொற்பொழிவாளர் - கைதுசெய்த போலீஸ்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. சுமித் சர்மா ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஆன்மிகம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்... மேலும் பார்க்க

நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முத... மேலும் பார்க்க

சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான 'வைரநாமம்' திருடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

`அவளை பிடிக்கவில்லை' - மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவன்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலன்பூரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். இவர் தனது 26 வயது மனைவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறி காணவில்லை எனக்கூறி போலீஸில் புகார... மேலும் பார்க்க

புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை

புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார். இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மை... மேலும் பார்க்க