செய்திகள் :

"10-வது தான் படிச்சிருக்கேன்; வீடு இல்ல" - கேரம் உலக சாம்பியன் காசிமேடு கீர்த்தனா அரசிடம் கோரிக்கை

post image

7-வது கேரம் உலகக் கோப்பை டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை மாலத்தீவில் நடைபெற்றது.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றனர்.

7th carrom world cup - 7-வது கேரம் உலகக் கோப்பை
7th carrom world cup - 7-வது கேரம் உலகக் கோப்பை

இதில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவிலும் குழு, இரட்டையர், ஒற்றையர் என அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது.

அதிலும், சென்னையின் காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா மூன்று பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரசாந்த் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் - அபிஜித் இணை தங்கப் பதக்கம் வென்றது. குழு போட்டியிலும் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

காசிமேடு கீர்த்தனா
காசிமேடு கீர்த்தனா

மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கீர்த்தனா - காஜல் குமாரி தங்கப் பதக்கம் வென்றது. மற்றொரு இந்திய ஜோடி காசிமா - மித்ரா இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மகளிர் குழு பிரிவில் கீர்த்தனா, காஜல் குமாரி, காசிமா, மித்ரா என 4 பேர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

இவற்றில், தமிழக வீராங்கனைகள் கீர்த்தனா 3 தங்கப் பதக்கமும், காசிமா ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கமும், மித்ரா ஒரு தங்கப் பதக்கம் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதேபோல் தமிழக வீரர் அப்துல்லா ஆசிஃப் இதே தொடரில் ஸ்விஸ் லீக் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். நேற்று மாலை தமிழகம் திரும்பிய இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்களிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, ``இந்தியாவுக்காக விளையாடியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. SDAT ( Sports Development Authority of Tamilnadu) ரொம்ப உதவி பண்ணாங்க.

இந்த உலகக் கோப்பைக்கு எப்படி நான் போறதுன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல உதயநிதி சார் கூப்பிட்டாரு. ஒரு லட்சம் தருவார்னு நெனச்சேன் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கொடுத்தார்.

கீர்த்தனா
கீர்த்தனா

அவர் கொடுத்த காசுலதான் நான் போய்ட்டு ஜெயிச்சுட்டு வந்திருக்கேன். முதல்முறையா இந்தியாவுக்காக விளையாடுனது ரொம்பப் பெருமையா இருக்கு.

என்னோட குடும்பம் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணாங்க. மரிய இருதயம் (அர்ஜுனா விருது வென்றவர்) சார், நாசர் அலிகான் அவர்களுக்கு நன்றி.

உதயநிதி சார் ஜெயிச்சுட்டு வரணும்னு சொன்னாரு. அவர் என்கரேஜ் பண்ணதுல ஜெயிச்சிட்டு வந்தது ரொம்ப பெருமையா இருக்கு.

டீம், டபுள்ஸ், சிங்கிள்ஸ் எல்லாத்துலயும் ஜெயிச்சிருக்கோம். நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். நாங்க ஏழ்மையான குடும்பம், வீட்டு வசதி இல்ல. எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை, வீடு கட்டித் தருமாறு அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை வைத்தார்.

அவரைத்தொடர்ந்து பேசிய காசிமா, ``நானும் கீர்த்தனாவும் 13 வருஷமா ஒரே கிளப்லதான் பயிற்சி எடுத்துட்டு இருக்கோம்.

என்னோட பார்ட்னர் கீர்த்தனா உலகச் சாம்பியனா ஆகியிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நான் சாதிச்சதும் கீர்த்தனா சாதிச்சதும் ஒன்னுதான். யுனிவர்சிட்டி அளவுக்கு கேரம் கேம் கொண்டு போனா, கிரிக்கெட் செஸ் அளவுக்கு கேரமும் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு" என்று கூறினார்.

காசிமா
காசிமா

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பையில் மகளிர் 3 பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

``எனது முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்'' - கேரம் வீரர் அப்துல் ஆஷிக்

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

"நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம்" - கேரம் வீராங்கனை காசிமா

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ... மேலும் பார்க்க

``திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி... மேலும் பார்க்க

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்... மேலும் பார்க்க

Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G... மேலும் பார்க்க