செய்திகள் :

100 நாள் வேலைத்திட்டம்: "நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?" - அழைப்பு விடுக்கும் எல்.முருகன்

post image

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவர், ஏ.டி.சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தியுள்ளார்.

அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க நிர்வாகியுமான எல்.முருகன் மேடையில் உரை நிகழ்த்தியுள்ளார்.

ஊட்டி பொதுக்கூட்டம்
ஊட்டி பொதுக்கூட்டம்

தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், "ஊழல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டே மாதங்களில் தி.மு.க வீட்டிற்குப் போகப்போகிறது. ஊழல் என்றாலே தி.மு.க. என்று தான் அர்த்தம்.

2ஜி விவகாரத்தில் காற்றிலும் மெகா ஊழல் செய்தது தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மோடி அவர்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறார்.

ஆனால், மத்திய அரசின் திட்டங்களின் மீது தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்கள் எனப் பிரதமர் மோடி அவர்கள் உயர்த்தியிருக்கிறார். நேரடியாக அவரவர் கணக்குகளில் பணம் செல்லும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

எல்.முருகன் உரை
எல்.முருகன் உரை

100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும். நான் தயாராக இருக்கிறேன். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்" என்றார்.

"இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்" – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அம... மேலும் பார்க்க

திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிர... மேலும் பார்க்க

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ்இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து... மேலும் பார்க்க

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது.சில ... மேலும் பார்க்க