செய்திகள் :

"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா

post image

சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.

எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.

விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வந்த நிலையில், அந்தத் தொடர் முடிவடைந்ததும் இதோ இப்போது ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் ‘அய்யனார் துணை’யிலும் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுவும் இந்தச் சீரியலில் நடிகர் ரோசரியின் முன்னாள் காதலியாக நடித்து வருகிறார்.

ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்து, 'காதல், அதில் தோல்வியடைந்தது போன்ற விஷயங்கள் நிஜவாழ்க்கையில் நடந்திருக்கிறதா’ என்று கேட்டோம். பழைய நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.

கம்பம் மீனா
கம்பம் மீனா

‘’அப்ப நான் பத்தாவது படிச்சிட்டிருந்தேன். பள்ளிக்கூடத்துல படிச்சிட்டிருக்கிறப்ப கூடப் படிக்கிற பசங்க பேனா பென்சில் வாங்கித் தர்றதையெல்லாம் கூட காதல்னு மத்தவங்க கேலியா பேசுவாங்க. பக்கத்து வீட்டுப் பையன் கூட சேர்ந்து நடந்தபடி பள்ளிக்கூடம் போறதைப் பார்த்தாலே ஒரு கூட்டம் கேலி செய்துகிட்டே பின்னாடி வரும். அதையெல்லாம் எப்படிங்க லவ்னு சொல்ல முடியும்? சொல்லப் போனா காதல்னா என்னன்னே சரியா தெரியாது. அப்படிப் பேசவே பயமாவும் இருக்கும்.

தவிர அப்ப பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதுமே கல்யாணம் செய்து கொடுத்துடுவாங்க. எங்க வீட்டுல என் அக்காவை 11 வது படிச்சிச்சிட்டிருக்கிறப்ப எங்க மாமா மகனுக்குக் கட்டிக் கொடுத்தாங்க. எனக்கும் பத்தாவது முடிக்கிறதுக்கு ரெண்டு மாசம் இருக்கும் போதே கல்யாணப் பேச்சு தொடங்கிடுச்சு. எங்க இன்னொரு மாமா மகன் தயாரா இருந்தார்.

சொந்தம் விடுபட்டுடக் கூடாதுனு எங்க பகுதியில முக்கால்வாசி பேர் சொந்தத்துலதான் கல்யாணம் செய்வாங்க. எனக்கும் அதேதான் நடந்தது.

வயசு15. அன்னைக்குத் தேதிக்கு அது குழந்தைத் திருமணம்தான். ஆனா யாரோட எதிர்ப்பும் இல்லாம நடந்தது.

Favourite Family - 'பாக்கியலட்சுமி' குடும்பம்
Favourite Family - 'பாக்கியலட்சுமி' குடும்பம்

எனக்கு கல்யாணத்தைப் பிடிக்காம இல்ல, அதை நினைச்சு கொஞ்சம் பயம் இருந்ததால் ’மேற்கொண்டு கொஞ்சம் படிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கிடுறேனே’னு சொன்னேன். அப்ப பத்தாவது முடிச்சிட்டு டீச்சர் ட்ரெய்னிங் சேரலாம்னு இருந்தது. ஊர்ல இருந்த ஒரு அக்கா மூலமா அதுக்கு அப்ளை செய்து வரவும் சொல்லியிருந்தாங்க.

ஆனா வீட்டுல ‘உன் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காமிச்சப்ப, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் ஆகும்’னுதான் சொன்னார்னு சொல்லி என் விருப்பத்தைக் கண்டுக்காம கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டாங்க.

அதுக்காக அழுதுகிட்டெல்லாம் தாலி கட்டிக்கலை. ஆனா கொஞ்சம் திரும்பிப் பார்த்தா நிறைய விஷயங்களை மிஸ் பண்ணின ஒரு ஃபீல் அப்பப்ப வரும். காலேஜ் படிக்கிற, வேலைக்குப் போற பெண்களைப் பார்க்குறப்பெல்லாம்  ஒரு ஏக்கம் வரும்.

பாக்கியலட்சுமி கம்பம் மீனா
பாக்கியலட்சுமி கம்பம் மீனா

அதனாலேயே ரெண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு விருப்பப்பட்டு கொஞ்ச காலம் எல்.ஐ.சி ஏஜெண்ட்டா இருந்தேன்.

பிறகு வாழ்க்கை எங்கெங்கோ போய் நான் நினைச்சே பார்க்காத சினிமா பக்கம் வந்து இன்னைக்கு பசங்களுக்கும் கல்யாணமெல்லாம் பண்ணி வச்சுட்டு நிம்மதியா நடிச்சிட்டிருக்கேன்’’ என்றவர்,

‘இதனாலேயே பாருங்க, லவ் ஃபெயிலியர் சீன் ஏதாவது இருந்தா. கூட நடிச்சிட்டிருக்கிற சின்ன வயசு ஆர்ட்டிஸ்டுகள் கிட்ட யாராவது லவ் ஃபெயிலியர் ஆள் இருக்கீங்களா, எனக்கு எக்ஸ்பிரஷன் சொல்லித் தர்றீங்களானு கேட்டு லந்து பண்ணுவேன்’ எனச் சிரிக்கிறார்.   

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு த... மேலும் பார்க்க

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' - எதற்காகத் தெரியுமா?

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே 'பிக்பாஸ் தி காமன் மேன்' அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்... மேலும் பார்க்க

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த... மேலும் பார்க்க

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவ... மேலும் பார்க்க