செய்திகள் :

16 வயதினிலேயில் என்ட்ரி: 'எனக்கு முகவரி கொடுத்தவர்' - பாரதிராஜாவுக்கு கவுண்டமணி இரங்கல்

post image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் '16 வயதினிலே'. அந்தத் திரைப்படமே அவருக்கு அதிரிபுதிரி வெற்றியை அள்ளித் தந்தது.

அது மட்டுமல்லாமல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் ஏற்கெனவே தமிழ் திரையுலகில் 'பீக்'கில் இருந்தாலும், இந்தத் திரைப்படம் அவர்களுக்கு புதிய கோணத்தைத் தந்தது.

அதே மாதிரி '16 வயதினிலே' செய்த பல சாதனைகளில் ஒன்று, தமிழ் திரையுலகிற்கு சிறந்த நகைச்சுவை நடிகரான 'கவுண்டமணி'யை தந்தது.

பாரதிராஜா
பாரதிராஜா

ஆனால், இந்தத் திரைப்படத்தில் கவுண்டமணிக்கு நகைச்சுவை ரோல் அல்ல. நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரம்.

இன்று பாரதிராஜா காலமானார். அவர் குறித்து நடிகர் கவுண்டமணி பகிர்ந்துள்ளதாவது...

"பதினாறு வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா இயக்கிய பல படங்களில் நான் நடித்துள்ளேன். 16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா. அவர் மாபெரும் கலைஞர் அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்". எனத் தெரிவித்துள்ளார்.

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க