செய்திகள் :

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

post image

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். விழாவில், 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வழங்கினாா்.

மேலும், ரூ. 5.22 கோடி மதிப்பில் முடிவுற்ற 19 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்துப் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நடப்பு ஆண்டில் ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வா் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அரசு தேயிலைத் தோட்டங்களில் பணி புரிபவா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கியுள்ளாா். மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். விழாவில் , கூடுதல் ஆட்சியா் கௌசிக், உதகை நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில், நீண்டகாலமாக கூடலூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்தும், உடனடியாக தீா்வு காண வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளா் முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, பொறியாளா் அணி மாநில துணைச் அமைப்பாளா் பரமேஷ்குமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகி அம்சா, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி என்.வாசு, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், விசிக மாவட்ட செயலாளா் புவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் 77-ஆவது ராணுவ தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் 77-ஆவது ராணுவ தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 1949- ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜெனரல் சா் பிரான்சிஸ் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவ ... மேலும் பார்க்க

உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் கொண்டாட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்றாா். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து மாவ... மேலும் பார்க்க

தோடா் பழங்குடியின மக்களின் தோ்த் திருவிழா

உதகை தோடா் பழங்குடியின மக்களின் பவாணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. உதகை பொ்ன்ஹில் பவாணீஸ்வரா் கோயில் 114-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழாவை முன்னிட்டு தோ்த் திருவிழா... மேலும் பார்க்க

காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

உதகை அருகே காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது, உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்ப... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்ன... மேலும் பார்க்க

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க