கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இள...
``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 7) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.
“2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார். கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா 15 தொகுதிகளில் ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் தெரியும்.
கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஓபிஎஸ் கூறியதும் எனக்கு பின்னர்தான் தெரியும்.

சிலரின் சதி காரணமாக சீட் உடன்பாடு ஏற்படாததால் 2011 தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு எடுத்தோம்.
பிறகு ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்: “உங்கள் மீது எல்லையற்ற மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி குறித்து முடிவு எடுப்பது உங்களின் சொந்த உரிமை. உங்களை ஒரு சொந்த சகோதரனைப் போலவே பாவித்து வருகிறேன். இந்த சகோதரி என்றும் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறாள்” என்று ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தார்,” என்று கூறியிருக்கிறார்.
















