செய்திகள் :

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

post image

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், நைட்க்ளப் உரிமையாளர்கள் சௌரப் லுத்ரா, கவுரவ் லுத்ரா ஆகியோர் தீப்பிடித்த அன்று அதிகாலையில் இண்டிகோ விமானம் மூலம் தாய்லாந்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

லுத்ரா சகோதரர்கள்
லுத்ரா சகோதரர்கள்

அவர்கள் தாய்லாந்தில் இருந்து கொண்டு தீவிபத்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது.

தீப்பிடித்த நைட்க்ளப்பில் அஜய் குப்தா என்பவரும் பங்குதாரர் ஆவார். அவரை போலீஸார் தேடி வந்தனர். அவரது சொந்த ஊர் டெல்லியாகும். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதித்து பார்த்தபோது அவர் அங்கிருந்து தலைமறைவாக இருந்தார்.

பொய் காரணம் கூறி மருத்துவமனையில் சேர்ந்த குப்தா

இதையடுத்து அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. டெல்லி போலீஸாரும், கோவா போலீஸாரும் சேர்ந்து அவரை தேடிக்கொண்டிருந்தனர்.

டெல்லியில் அஜய் குப்தா அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். மொபைல் போனையும் மிகவும் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்தினார். இதனால் அவரை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

கடைசியாக அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, டெல்லி ரஜ்பத் நகரில் உள்ள மூளை மற்றும் முதுகுதண்டு மருத்துவமனையில் சென்று, தனக்கு முதுகுதண்டில் பிரச்சனை உள்ளது என்று கூறி சேர்ந்து கொண்டார்.

அவர் இருக்கும் இடம் தெரிந்தவுடன் டெல்லி போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் பொய்யான காரணம் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தீ விபத்து ஏற்பட்ட கிளப்
தீ விபத்து ஏற்பட்ட கிளப்

3 முதல் 4 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொண்டு ஜாமீன் கேட்பது போன்ற திட்டங்களில் ஈடுபடலாம் என்று அஜய் நினைத்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அஜய் குப்தாவை கைது செய்து போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரித்தபோது, “நான் நைட்க்ளப்பில் பிஸ்னஸ் பார்ட்னர்; நைட்க்ளப் ஆபரேஷனில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவரை அங்கிருந்து கோவாவிற்கு கொண்டு செல்ல கோவா போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நைட் க்ளப் ஊழியர்கள் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் விசாரணையில் லுத்ரா சகோதரர்கள் இருவரும் டெல்லியில் ஒரே முகவரியில் 42 கம்பெனிகளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூ... மேலும் பார்க்க