செய்திகள் :

'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் கடத்திய கும்பல்

post image

மும்பை அந்தேரி ஜுகு பகுதியில் வசிக்கும் மோனில் என்பவர் ஜாபர் குரேஷி என்பவரிடம் ரூ.80 லட்சத்தை 30 சதவீத வட்டிக்கு வாங்கி இருந்தார். ஆனால் மோனல் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை.

இதையடுத்து ஜாபர் குரேஷியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மோனில் தாயார் பினாகினி பன்சாலியை (62) காரில் கடத்திச் சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அடைத்து வைத்து ரூ.80 லட்சம் கடன் வாங்கியிருப்பதை ஒப்புக்கொண்டதாக பினாகினியிடம் ஸ்டாம்ப் பேப்பரில் கைரேகை பெற்றுக்கொண்டனர்.

கைது
கைது

ரு.80 லட்சத்தைத் திரும்பக் கொடுக்கவில்லையெனில் உனது மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி மிரட்டினர். அதோடு பினாகினி கைரேகை வைப்பதை வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று கூறி பினாகினியை மிரட்டி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அடிக்கடி பினாகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினர்.

இது குறித்து பினாகினி தனது கணவரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இருவரும் சேர்ந்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜாபரின் கூட்டாளி அல்பாஸ் பெரோஸ் கசம் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

ஜாபர் குரேஷி தலைமறைவாகிவிட்டார். போலீஸார் கசம் வீட்டில் ரெய்டு நடத்தியதில் குரேஷி ஏராளமானோருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதோடு பினாகினியை மிரட்டி கையெழுத்து வாங்கிய வீடியோ இருந்த மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஜாபர் குரேஷி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் 17 வயது சிறுவன் ஓட்டம்; 3 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர் சுஹாஷ் (48). மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோடு அருகே ஸ்ரீ கிருஷ்ணா டெஸ்டிங் ஏஜென்சி என்ற பெயரி... மேலும் பார்க்க

ம.பி: 145 வழக்குகளில், 6 பேரை மீண்டும் மீண்டும் அரசு சாட்சிகளாக நிறுத்திய காவலர் - சாட்சி மோசடி

மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸார் வழக்குகளில் அரசு சாட்சிகளை சேர்ப்பதில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுவாக வழக்குகளில் அரசு சார்பாக சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளைய... மேலும் பார்க்க

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க