செய்திகள் :

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

post image

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை உடல்நலம் காரணமாக  பயணம் செய்ய முடியாது. பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதும் சந்தேகம் என்று அறிவித்துள்ளார். அவரின் முடிவுக்கு என்ன காரணம்?

அண்ணாமலை

4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம்!

பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, நேற்றைய செய்தியாளர் சந்திப்பு பட்ஜெட் பற்றியது. அதில் பட்ஜெட் தான் முதன்மையாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 'நீங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே' என்று கேட்டனர்.

அதற்கு தான் அண்ணாமலை, 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக கூறினார். அந்தக் கேள்விக்கும், அவரின் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. கடந்த 2  ஆண்டுகளாக அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பட்டு வருவது உண்மை.

இந்த 2 ஆண்டுகளில் அவருக்கு எவ்வளவோ கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் மறுக்காமல் அண்ணாமலை அதை செய்தார். தந்தைக்காக கட்சிப் பணிகளில் இருந்து விடுவிக்க சொல்ல அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன.

பட்ஜெட்

ஆனால் அது 4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம். அதை அவர் தலைப்புச் செய்தியாக சொல்லியிருக்கக் கூடாது. பட்ஜெட், அமெரிக்கா வரி குறைப்பு என்று தேசியளவுக்கு பல்வேறு முக்கிய விவகாரங்கள் உள்ளன. அவைதான் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

`அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார்'

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போதுதான் பிரச்னைகளை ஓரளவுக்கு சரி செய்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவை அனைத்தையும் அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவரான அவருக்கு 6 தொகுதிகளை கொடுத்து தற்போதைய மாநிலத் தலைமை  மட்டுப்படுத்துவதாக எல்லாம் அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இதேபோல முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனுக்கு 5 தொகுதிகள் தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளன.

இது சுற்றுப் பயணத்திற்காக போடப்பட்ட பொறுப்புதான். அதில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்குமே 3-7 தொகுதிகள் தான் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் முக்கியமான முகம் என்பதால் கட்சி நிச்சயம் அவருக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும்.

கமலாலயம்
கமலாலயம்

2024 நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்த தமிழ்நாடும் அண்ணாமலையின் பொறுப்பில் தான் விடப்பட்டது. அதில் அண்ணாமலை என்ன சாதனை செய்தார். கூட்டணி தொடங்கி அப்போதெடுத்த பல முடிவுகள் தவறு என்பதால்தான் இந்த தேர்தலுக்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாஜகவை பொறுத்தவரை கட்சிதான் முதன்மையானது. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இங்கு ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது. அண்ணாமலை தொடர்ந்து அந்தத் தவறை செய்து வருகிறார். இதை அமித் ஷா உள்ளிட்டோர் விரும்பவில்லை.

அமித்ஷா
அமித்ஷா

ஏற்கெனவே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அமித் ஷாவின் டெல்லி ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தபோதே அவர் கடும் கோபமடைந்தார். தற்போது அமித் ஷாவின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது.

அண்ணாமலையின் கோபத்திற்கு காரணம் இந்த 6 தொகுதிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவருக்கு தேசிய அளவில் முக்கியமான பதவி கொடுக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை வழங்கவில்லை.

நிதின் நபின்
நிதின் நபின்

நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு தேசிய பொறுப்புகள் போடும் பணி நடந்து வருகிறது. இதில் அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் இருந்து பிறகு நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது அவரின் ஈகோவை சீண்டிவிட்டது.

கட்சி தன்னை ஓரம் கட்டுவதற்கு முன்பு, நான் விலகியதுதான் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தமே இல்லாமல் இதனை அறிவித்துள்ளார். இதன்மூலம் பாஜகவில் விரிசல் என்கிற தோற்றம் உருவாகியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி – டிடிவியை இணைத்த அமித் ஷா சொந்தக் கட்சி விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால் டெல்லி தலைமை அதிருப்தியாகியுள்ளது. தேசியளவிலான பதவி, எம்எல்ஏ சீட் என்று அவருக்கு அடுத்தடுத்து காத்திருந்த பதவிகள் எல்லாமே இனி கானல் நீராகிவிடவும் வாய்ப்பு இள்ளது. ” என்றனர்.

`துரோகி நண்பா.. டோன்ட் வொர்ரி!'- ராகுல் - மத்திய இணை அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம்! | Viral Video

2020-ல் இந்தியா - சீனா இடையே நடந்த ஃபேஸ்-ஆஃப் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய `Four Stars Of Destiny'என்ற புத்தகத்தைக் கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ... மேலும் பார்க்க

வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, எந்த தொகுதி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏ... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க

``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார... மேலும் பார்க்க