செய்திகள் :

AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!

post image

மும்பையைச் சேர்ந்த 'டெசர்ட் தெரபி' என்ற பிரபலமான பேக்கரியில், அதிதி சிங் என்ற பெண் ₹2,500 மதிப்புள்ள 'ஆல்மண்ட் பிரலைன் ஸ்ட்ராபெர்ரி டார்க் சாக்லேட்' ஒன்றை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்துள்ளார்.

டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அந்த உணவு முழுவதும் சேதமடைந்துவிட்டதாகக் கூறி, 1,820 ரூபாயை திருப்பி தருமாறு புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தைக் கண்ட பேக்கரி நிர்வாகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆராய்ந்து பார்த்ததில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி புகைப்படம் என்பது தெரியவந்ததுள்ளது.

cake REP Image

அந்தப் புகைப்படத்தில் கேக்கின் மேலிருந்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் 'Happy Birthday' என்பதற்குப் பதிலாக 'Appy Birthda' என்று எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த கேக்கின் புகைப்படமும் பளபளவென இருந்ததை பேக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

டெசர்ட் தெரபி நிறுவனம், தனது சமூக ஊடகப்பக்கத்தில் இந்த மோசடி குறித்து பதிவிட்டிருக்கிறது.

அதில், "வாடிக்கையாளர்களிடமிருந்து இதுபோன்ற பல புகார்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆனால், AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றது இதுவே முதல்முறை, இது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் மீது இருக்கும் சிறிய தவறுகள் கூட குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன.

ஆனால் வாடிக்கையாளர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியவில்லை" என்று டெசர்ட் தெரபி நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

மறைந்த தந்தையின் வங்கி கடன்; ரூ.18 லட்சம் ரூபாய் கேட்கும் அதிகாரிகள் - செய்வதறியாமல் தவிக்கும் மகன்

பெங்களூருவைச் சேர்ந்த நபரின் தந்தை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடிப்பதற்காக தாயுடன் எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற... மேலும் பார்க்க

``30 வயதில் கைவிட்ட காதலன் என்ன செய்வேன்?'' - புலம்பிய பெண்; ஆலோசனை சொன்ன நெட்டிசன்கள்

சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்த பிறகு காதலர்களிடையே பிரேக்கப் ஆவது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பேசி முடிக்கும் போது எதாவது வாய்த்தகராறு ஏற்பட்டாலே பிரேக்கப் ச... மேலும் பார்க்க

kathipara Flyover Metro Bridge : வியக்கவைக்கும் கத்திபாரா மெட்ரோ பாலம் பணிகள்!

kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyo... மேலும் பார்க்க

டெல்லி குண்டுவெடிப்பு: அமலாக்கத் துறை சோதனையில் அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லியில் கடந்த வாரம் நடந்த கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் மற்றும் அதற்கு திட்டமிட்ட டாக்டர் முஜாமில் சகீல் உட்பட இக்குண்டு வெடிப்பு ... மேலும் பார்க்க

`இறந்துவிட்டார்' என நினைத்த நபரை 28 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு இழுத்து வந்த SIR! - என்ன நடந்தது?

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக SIR படிவம் கொடுக்கப்பட்டு, வாக்காளர்களிடம் நிரப்பி வாங்கப்படுகிறது. இதனால் வெளியூரில் இருப்பவர்கள... மேலும் பார்க்க

5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!

சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவ... மேலும் பார்க்க