செய்திகள் :

Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா

post image

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார்.

அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Asha Bhosle
Asha Bhosle

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமுற்றேன்.

இது ஒரு சாதாரண இரங்கல் அல்ல. என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு பெரும் இழப்பு. அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும், அதே நேரத்தில் ஒரு பின்னணி பாடகியாக என்னை மதித்து நடந்து கொண்ட விதமும் என்றும் மறக்க முடியாதவை.

அந்த நினைவுகள் என் வாழ்நாளில் எப்போதும் என்னுடன் இருக்கும். என் வாழ்க்கையில் அழியாத இடத்தைப் பெற்றவர் ஆஷா போஸ்லே.

அவரது திறமைக்கு அளவே இல்லை, வேறு எந்த குரல்களுடனும் ஒப்பிடமுடியாத தனிக்குரல். தனித்திறமை வாய்ந்த குரலும்கூட, அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

இளையராஜா
இளையராஜா

எப்போது சென்னைக்கு வந்தாலும், என்னை வந்து சந்திக்கும் அன்புச் சகோதரி, அவரின் அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. திரையுலகம் என்றைக்கும் மறக்க முடியாத குரல்.

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று இளையராஜா உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Asha Bhosle: "அவரின் இசை இந்த பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும்" - ஷங்கர் மகாதேவன்

பிரபல பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு 92 வயது. 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

Pa. Ranjith: "மாற்றம் இருக்கணும்!" - இயக்குநர் பா. ரஞ்சித் சொல்வதென்ன?

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வருடந்தோறும் பி.கே. ரோஸி திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. ஐந்தாவது முறையாக இந்த ஆண்டும் அந்தத் திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. Director Pa Ranjith - V... மேலும் பார்க்க

'நானும், அவரும் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம்' சிவாஜி - ஆஷா போஸ்லேவின் 'ராக்கி'மலர்

இன்று பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமாகியுள்ளார். மகாராஷ்டிராவில் பிறந்த ஆஷா போஸ்லே தமிழ் திரைப்படங்களில் பாடி மட்டும் தமிழ்நாடு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை'... மேலும் பார்க்க

'செண்பகமே செண்பகமே' டு 'செப்டம்பர் மாதம்': PAN இந்தியா பாடகி ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட்ஸ்

1970, 80-களில் இந்திய இசை உலகில் உச்சத்தில் இருந்தவர் பாடகி ஆஷா போஸ்லே. இன்று இயற்கை எய்தியிருக்கிறார். இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஆஷா போஸ்லேயின் கடைசி பாடல் கடந்த பிப்ரவரி மாத... மேலும் பார்க்க

Asha Bhosle: `இந்திய திரையிசையின் முடிசூடா அரசி!' - ஆஷா போஸ்லே காலமானார்

இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பை... மேலும் பார்க்க

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில... மேலும் பார்க்க