செய்திகள் :

Asha Bhosle: `இந்திய திரையிசையின் முடிசூடா அரசி!' - ஆஷா போஸ்லே காலமானார்

post image

இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள பிரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இத்தகவலை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே

இது தொடர்பாக தன்தாயின் மறைவு குறித்து ஆனந்த் போஸ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தாய் ஆஷா போஸ்லே இன்று இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணி அளவில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆஷா போஸ்லே மறைவைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

​மகாராஷ்டிராவின் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, இந்திய இசை வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத ஒரு சகாப்தத்தைப் படைத்தவர். 'தில் சீஸ் க்யா ஹை' மற்றும் 'மேரா குச் சமான்' ஆகிய பாடல்களுக்காக தேசிய விருதுகளை வென்றுள்ள இவருக்கு இந்தியத் திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி இவரை இந்திய அரசு சிறப்பித்துள்ளது. ​

தமது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளை மயக்கிய ஆஷா போஸ்லேவின் மறைவு, இந்திய இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

'செண்பகமே செண்பகமே' டு 'செப்டம்பர் மாதம்': PAN இந்தியா பாடகி ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட்ஸ்

1970, 80-களில் இந்திய இசை உலகில் உச்சத்தில் இருந்தவர் பாடகி ஆஷா போஸ்லே. இன்று இயற்கை எய்தியிருக்கிறார். இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஆஷா போஸ்லேயின் கடைசி பாடல் கடந்த பிப்ரவரி மாத... மேலும் பார்க்க

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில... மேலும் பார்க்க

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க