தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல்...
BB Tamil 9: "இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்" - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது.
பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார்.
தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.
இறுதியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர்.

வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், துஷார் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
"18 லட்சத்தை விட இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன். அரோராவை அழுக வைக்கணும்னா எல்லாரும் ஈசியா துஷார் பேரை தான் சொல்லிட்டு இருந்தாங்க" என அரோரா சொல்கிறார்.

" நான் போனதுக்கு காரணம் நீ இல்ல. உன்னோட உழைப்பால தான் இவ்வளவு தூரம் வந்துருக்க...யாரோட பேரை வச்சும் நீ முன்னாடி வரல. நல்லா பண்ணிட்டு இருக்க. பார்க்க நல்லா இருக்கு" என்று துஷார் அரோராவுக்கு ஆறுதல் சொல்கிறார்.
















