செய்திகள் :

BB Tamil 9: `சில போட்டியாளர்கள் ரொம்பவே ஓவரா பண்றாங்க!' - ரெட் கார்டு விவகாரம் குறித்து கூல் சுரேஷ்

post image

நிறைவுப் பகுதியை நெருங்கி விட்டது பிக்பாஸ் சீசன் 9.

திவாகர், பிரவீன் காந்தி, வி.ஜே பார்வதி, கமருதீன் உள்ளிட்ட இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர்.

முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே சில காரணங்களால் நந்தினி வெளியேறினார்.

தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஆதிரை, பிரவீன் காந்தி, துஷார், எஃப்.ஜே, கனி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.

கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர்.

தற்போது வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகிய ஆறு பேர் நூறாவது நாளை நோக்கி முன்னேறியுள்ளனர்.

கூல் சுரேஷ் |Cool Suresh

கமருதீன், பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டைத் தாண்டி வெளியில் பெரிதும் பேசப்பட்டது.

குறிப்பாக முந்தைய பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் சான்ட்ராவுக்கு பகிரங்கமாக ஆதாவு தெரிவித்து, பார்வதி, கமருதீன் இருவரையும் வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் முன்னாள் போட்டியாளரான நடிகர் கூல் சுரேஷிடம் பேசினோம். இவருடைய கருத்தோ வேறொரு கோணத்தில் இருக்கிறது.

''அந்த நிகழ்ச்சிக்குப் போறதுனு முடிவெடுத்துட்டா எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். நான் எதுக்கு எல்லாருக்கும் எச்சரிக்கை விடுறேன்னு நினைக்கிறீங்க? நான் கலந்துகிட்ட சீசன்ல நானா வாய்ப்பு கேட்டு போகலை. அவங்களாதான் கூப்பிட்டாங்க. நல்ல வேளை, நானெல்லாம் இப்படியெல்லாம் அசிங்கப்படாம வெளியில வந்துட்டேன். அதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்'' என்றவரிடம், இந்த சீசன் பார்க்கிறீர்களா' எனக் கேட்டோம்.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9

''பார்க்க வேண்டாம்னு நாம ஒதுங்கினாலும் மொபைலை எடுத்தா ஏதாவதொரு வீடியோ வந்துடுதே. அதனால அப்பப்ப பார்த்தேன். சில போட்டியாளர்களும் ரொம்பவே ஓவரா பண்றாங்க. அதனால தொடர்ந்து பார்க்க பிடிக்கல. ரெண்டு நாள் முன்னாடி வாக்கிங் போயிட்டிருந்தேன். வழியில வயசான ஒரு அம்மாவும் அவங்க மகளும் பார்த்து, கிட்ட வந்து பேசினாங்க. அந்த வயதான அம்மா 'பிக்பாஸ்ல' வந்தீங்கதானேனு என்னைக் கேட்டாங்க. 'நான் ஆமா சொல்லி முடிக்கல, அதுக்குள் அவங்க மகள் இந்த சீசன் ரொம்ப ஓவரா இருக்குங்க,'னு சொல்லுறாங்க..

சிலருக்கு சினிமாவுல சண்டைப் படங்கள் பிடிக்கும். அத மாதிரி சண்டைக் காட்சிகள் பிடிக்கிற ஆடியன்ஸ் மட்டும்தான் இந்த சீசனை விடாமப் பாத்திட்டிருப்பாங்கனு நினைக்கிறேன்' என்கிற இவர்,

`இது தேர்தல் நேரமா இருக்கிறதால இதைச் சொல்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யணும்னு எந்தக் கட்சி சொல்லுதோ, அந்தக் கட்சிக்கு நான் பிரசாரம் செய்யக் கூட ரெடி' என கூலாக முடித்தார்.

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்'கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இர... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?

முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும்.ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்ல... மேலும் பார்க்க

BB Tamil 9: "சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க?" - கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ந... மேலும் பார்க்க